நியூ ஹரைசன்ஸ்
From Wikipedia, the free encyclopedia
நியூ ஹரைசன்ஸ் (New Horizons) என்பது தற்போது நாசாவினால் விண்ணுக்கு ஏவப்பட்டிருக்கும் ஒரு தானியங்கி விண்கலமாகும். இதுவே புளூட்டோ என்ற குறுங்கோளை நோக்கி ஏவப்பட்ட முதலாவது விண்கலமாகும். இது புளூட்டோவையும் அதன் நிலாக்களான சாரன், நிக்ஸ், மற்றும் ஹைட்ரா ஆகியவற்றை ஆராயும்.
இந்த பக்கம் காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும். |
இயக்குபவர் | நாசா |
---|---|
திட்ட வகை | அண்மிப்பது |
அணுகிய விண்பொருள் | ஜுப்பிட்டர், புளூட்டோ, சாரன் |
அணுகிய நாள் | ஜூலை 14, 2015 |
ஏவப்பட்ட நாள் | ஜனவரி 19, 2006 |
ஏவுகலம் | ஆட்லஸ் V-551 |
திட்டக் காலம் | புளூட்டோவை அண்மிப்பது (>10 ஆண்டுகள்) |
தே.வி.அ.த.மை எண் | 2006-001A |
இணைய தளம் | நியூ ஹரைசன்ஸ் இணையம் |
நிறை | 478 கிகி |
நியூ ஹரைசன்ஸ் விண்ணுளவி ஜனவரி 19, 2006 இல் புளோரிடாவில் உள்ள கேப் கனவேரல் வான்படைத் தளத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவப்பட்டது. இது பெப்ரவரி 28, 2007 இல் வியாழனை 5:43:40 UTC நேரத்தில் அண்மித்தது. புளூட்டோவை இது ஜூலை 2015 இல் இது புளூட்டோவை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பூமி சார்பான வேகம் 16.21 கிமீ/செ (36,260 மைல்/மணி) ஆகும். இதுவே இதுவரை விண்ணுக்கு ஏவப்பட்ட விண்கலங்களில் அதிகூடிய வேகத்தைக் கொண்டதாகும்.
இதற்கான மொத்த செலவீனம் 15 ஆண்டுகளுக்கு (2001 இலிருந்து 2015 வரை) கிட்டத்தட்ட $650 மில்லியன் அமெரிக்க டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.