நிருத்தம் (பரதநாட்டியம்)
பரத நாட்டிய நடன வகை / From Wikipedia, the free encyclopedia
நிருத்தம் என்பது பரதநாட்டியத்தில் சுத்த நடனம் ஆகும். இது உடல் அழகையும்[1], உடலின் அழகிய அசைவுகளையும், தாளத்தின் மிக நுணுக்கமான அளவைகளையும், கைகள், விரல்களின் அழகான முத்திரைகளையும், பாதஜால வித்தைகளையும் இசை, அதன் தாள மெல்லின வல்லினங்களையும் உருவகப்படுத்தும் ஒரு கலையாகும்.