நீர் குச்சி பூச்சிகள்
From Wikipedia, the free encyclopedia
நீர் குச்சி பூச்சிகள் அல்லது தண்ணீர் தேள் என்பன ரன்னேட்ரா (Ranatra) பேரினத்தினைச் சார்ந்த நீர் வாழ் பூச்சிகளாகும். இவை நெபிடே குடும்பத்தைச் சேர்ந்த கொன்றுண்ணி பூச்சிகள் ஆகும். உலகெங்கிலும் உள்ள வெப்பமான மற்றும் மிதவெப்பமான பகுதிகளில் உள்ள நன்னீர் வாழ்விடங்களில் சுமார் 100க்கும் மேற்பட்ட ரன்னேட்ரா சிற்றினங்கள் காணப்படுகின்றன. இவற்றில் தென் அமெரிக்காவில் கிட்டத்தட்ட 50 சிற்றினங்களும் ஆசியாவில் (1972 இல் மதிப்பாய்வு செய்யப்பட்டது) சுமார் 30 சிற்றினங்களும் காணப்படுகின்றன. மீதமுள்ள சிற்றினங்கள் பிற இடங்களில் காணப்படுகின்றன. இந்த பழுப்பு நிற பூச்சிகள் முதன்மையாகக் குளங்கள், சதுப்புநிலங்கள் மற்றும் கால்வாய்கள் போன்ற தேங்கி நிற்கும் அல்லது மெதுவாக நகரும் நீரில் காணப்படுகின்றன. ஆனால் ஓடைகளிலும் இவற்றைக் காணலாம். விதிவிலக்காக ஒருசில உப்பு நிறைந்த ஏரிகள் மற்றும் உவர் நீர்நிலைகளிலும் காணப்படுகின்றன.[1]
நீர் குச்சி பூச்சிகள் | |
---|---|
ரன்னேட்ரா சைனென்சிசு | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | கெமிப்டெரா |
துணைவரிசை: | கெட்ரோடெரா |
குடும்பம்: | நெபிடே |
பேரினம்: | ரன்னேட்ரா பேப்ரிசியசு, 1790 |