நைட்ரேட்டு எசுத்தர்
நைட்ரிக் அமிலத்தின் எசுத்தர் / From Wikipedia, the free encyclopedia
நைட்ரேட்டு எசுத்தர் (Nitrate ester) என்பது R−ONO2 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் வேதி வினைக்குழுவாகும். வாய்பாட்டிலுள்ள R என்பது எந்த ஒரு கரிமக் குழுவையும் குறிக்கிறது. இவை நைட்ரிக் அமிலம் மற்றும் ஆல்ககால்களின் எசுத்தர் உப்புகளாகும். நன்கு அறியப்பட்ட ஓர் உதாரணம் நைட்ரோகிளிசரின் ஆகும், பெயரில் நைட்ரோ இருந்தாலும் இது ஒரு நைட்ரோ சேர்மம் அல்ல.