பட்டனேஸ்
From Wikipedia, the free encyclopedia
பட்டனேசு (Batanes) என்பது பிலிப்பீன்சின் லூசோனின், ககயன் பள்ளத்தாக்குப் பிராந்தியத்தில் அமைந்துள்ள ஐந்து மாகாணங்களில் ஒன்றாகும்.[1] இதன் தலைநகரம் பசுகோ ஆகும். இம்மாகாணத்தில் 29 கிராமங்களும், 6 மாநகராட்சிகளும் உள்ளன. இதன் தற்போதைய மாகாண சபை ஆளுநர்மரிவோல் கைகோ (Marilou Cayco) ஆவார். 2015 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்புக்கு அமைவாக பட்டனேசு மாகாணத்தின் சனத்தொகை 17,246 ஆகும்.[2] இதன் மொத்த நிலப்பரப்பளவு 219.01 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். மேலும் பிலிப்பீன்சில் காணப்படும் 81 மாகாணங்களில், மொத்த நிலப்பரப்பளவின் அடிப்படையில் இம்மாகாணம் இறுதி மாகாணமாகவும் சனத்தொகையின் அடிப்படையிலும் இறுதி மாகாணமாகவும் காணப்படுகின்றது. அத்துடன் இம்மாகாணத்தில் இலோகானோ, தகலாகு , ஆங்கிலம் உள்ளடங்கலாக ஆறு பிரதான மொழிகள் பேசப்படுகின்றன.
விரைவான உண்மைகள் பட்டனேசு, நாடு ...
பட்டனேசு | |
---|---|
மாகாணம் | |
நாடு | பிலிப்பீன்சு |
பிராந்தியம் | ககயன் பள்ளத்தாக்கு |
நேர வலயம் | ஒசநே+8 (பிசீநே) |
மூடு