பட்னா மாவட்ட ஆட்சியர் அலுவலகம்
From Wikipedia, the free encyclopedia
பட்னா மாவட்ட ஆட்சியர் அலுவலகம் (Patna Collectorate) பட்னா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமை அலுவலகமாகும். கங்கையாற்றின் கரையில் காந்தி மைதானத்திற்கு அருகில் இவ்வலுவலகம் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் பட்னா மாவட்ட ஆட்சியர் அலுவலகம் Patna Collectorate, பொதுவான தகவல்கள் ...
பட்னா மாவட்ட ஆட்சியர் அலுவலகம் Patna Collectorate | |
---|---|
பொதுவான தகவல்கள் | |
கட்டிடக்கலை பாணி | டச்சு மற்றும் பிரித்தானியக் கட்டிடக்கலை |
இடம் | பட்னா, பீகார் |
நாடு | இந்தியா |
ஆள்கூற்று | 25°37′17″N 85°8′53″E |
உயரம் | 58 m (190 அடி) |
உரிமையாளர் | பீகார் அரசு |
மூடு
டச்சு கட்டிடக்கலை மற்றும் பிரித்தானியக் கட்டிடக்கலை [1] பாணியில் பட்னா மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. இது 200 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த ஒரு கட்டிட வளாகமாகும். 2008 ஆம் ஆண்டு , பீகார் அரசாங்கம் பட்னா மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தை பாரம்பரியக் கட்டடமாக பட்டியலிட்டது. [2]