பந்தாய் டாலாம்
கோலாலம்பூரில் புறநகரப் பகுதி / From Wikipedia, the free encyclopedia
பந்தாய் டாலாம், (மலாய்: Pantai Dalam; ஆங்கிலம்: Pantai Dalam; சீனம்: 班底达兰'); என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகரத்தில், தென் மேற்கு பகுதியில் அமைந்து உள்ள ஒரு புற நகரம். லெம்பா பந்தாய் நாடாளுமன்றத் தொகுதியின் ஒரு பகுதியும் ஆகும். பங்சார் பெருநகரப் பகுதிக்கு தெற்கே அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் பந்தாய் டாலாம் Pantai Dalam, நாடு ...
பந்தாய் டாலாம் Pantai Dalam | |
---|---|
புறநகர் | |
ஆள்கூறுகள்: 3°6′N 101°40′E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | கோலாலம்பூர் |
புறநகர் | பந்தாய் டாலாம் |
தொகுதி | கோலாலம்பூர் |
அரசு | |
• நகராண்மை | கோலாலம்பூர் மாநகராட்சி (DBKL) |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
• கோடை (பசேநே) | பயன்பாடு இல்லை |
மலேசிய அஞ்சல் குறியீடு | 55100 |
மலேசியத் தொலைபேசி எண் | +603-207 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண் | W ; V |
இணையதளம் | www.dbkl.gov.my |
மூடு
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் மிக முக்கியமான புறநகரப் பகுதியாக விளங்குகிறது. லெம்பா பந்தாய்க்கு அருகில் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகள் செபுத்தே (Seputeh), சிகாம்புட் (Segambut), மற்றும் புக்கிட் பிந்தாங் (Bukit Bintang). 2020-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி லெம்பா பந்தாய் மொத்த மக்கள் தொகை 148,094 ஆகும்.