பப்பராத்சி
From Wikipedia, the free encyclopedia
பார்ப்பரசிகர், பப்பராத்சி (pɑːpəˈrɑːtsi) (ஒருமை:(ஆ) பப்பராத்சோ (papaˈrattso) அல்லது (பெ) பப்பராத்சா) என்பது பிரபலங்கள், அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய நபர்கள் சம்பந்த பட்ட பொதுவிடங்களில் நிகழும் நேரடி நிகழ்வுகளை பதிவு செய்யும் CANDID எனப்படும் செய்தி புகைப்பட வல்லுனர்களை குறிக்கும் ஒரு இத்தாலிய சொல்வழக்கு ஆகும். பப்பராத்சிகள் பெரும்பாலும் எந்த ஒரு ஊடகங்களையோ பத்திரிக்கைகளையோ சார்ந்திராமல் சுதந்திரமாக செயல்பட்டு தங்களுக்கு தேவையான புகைப்படங்களையோ செய்திகளையோ சேகரிப்பவர்களாக இருக்கின்றனர். பப்பராத்சிகள் பிரபலங்களுக்கு நச்சரிப்பு தரும் நபர்களாகவே பெரும்பாலும் சித்தரிக்கபட்டுள்ளனர்.