பிரகதி வான்வெளி அருங்காட்சியகம்
இந்தியாவின் னமகாராட்டிர மாநிலத்திலுள்ள வான்வெளி அருங்காட்சியகம் / From Wikipedia, the free encyclopedia
பிரகதி வான்வெளி அருங்காட்சியகம் (Pragati Aerospace Museum) இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்திலுள்ள நாசிக் நகருக்கு வெளியே அமைந்துள்ளது. இதை இந்துசுத்தான் வான்வழி தொலையளவு பிரகதி அருங்காட்சியகம் என்றும் அழைக்கிறார்கள். 2001 ஆம் ஆண்டு ஆகத்து மாதத்தில் இந்துசுத்தான் வான்வழி தொலையளவு நிறுவனம் அதன் தொழில்நுட்ப சாதனைகளையும் பாராட்டத்தக்கதான அதன் பயணத்தையும் வெளிப்படுத்த இந்த அருங்காட்சியகத்தைத் திறந்தது.
விரைவான உண்மைகள் நிறுவப்பட்டது, அமைவிடம் ...
நிறுவப்பட்டது | ஆகத்து 2001 (2001-08) |
---|---|
அமைவிடம் | இந்தியா, மகாராட்டிரம், நாசிக், ஒசார் |
வகை | வான்வெளி அருங்காட்சியகம் |
மூடு
இந்துசுத்தான் வான்வழி தொலையளவு நிறுவனம் தயாரிக்கும் வானூர்திகளின் மாதிரிகள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டன. கண்காட்சியில் இம்மாதிரிகள் உயர் கோபுரங்களில் பொருத்தப்பட்டிருந்தன.