பிராங்குவாயிசு கோம்பெசு (Françoise Combes) (பிரெஞ்சு உச்சரிப்பு: [fʁɑ̃swaz kɔ̃b] (கேட்கⓘ); பிறப்பு: 12 ஆகத்து 1952) ஒரு பாரீசு வான்காணகப் பிரெஞ்சு வானியற்பியலாளரும் பிரெஞ்சுக் கல்லூரியின் பேராசிரியரும் ஆவார். இங்கு இவர் பால்வெளிகளும் அண்டவியலும் கட்டிலுக்குத் தலைவராக 2014 இல் தேர்வு செய்யப்பட்டார்.[1]
விரைவான உண்மைகள் பிராங்குவாயிசு கோம்பெசுFrançoise Combes, பிறப்பு ...
பிராங்குவாயிசு கோம்பெசு Françoise Combes |
---|
|
பிறப்பு | 12 ஆகத்து 1952 (1952-08-12) (அகவை 71) மாந்த்பெல்லியர், பிரான்சு |
---|
வாழிடம் | பாரீசு |
---|
தேசியம் | பிரெஞ்சியர் |
---|
துறை | வானியற்பியல் |
---|
பணியிடங்கள் | பாரீசு வான்காணகம் |
---|
கல்வி கற்ற இடங்கள் | மேனிலைப் பள்ளிப் பயிற்சி நிறுவனம் (École Normale Supérieure), பாரீசு திதரோத் பல்கலைக்கழகம் |
---|
விருதுகள் | CNRS வெள்ளிப் பதக்கம் |
---|
மூடு
மாண்ட்பெல்லியர் வெற்றி நகரப் பள்ளி 2017 செப்டம்பர் 15 இல் இவரது நினைவாக பிராங்குவாயிசு கோம்பெசு உயர்நிலைப் பள்ளி எனப் பெயரிடப்பட்டது.[2]
இவர் 1971 முதல் 1975 வரை மேனிலைப் பள்ளிப் பயிற்சி நிறுவனத்தில் பயின்றார். இவர் பாரீசு திதெரோத் பலகலைக்கழகத்தில் இயற்பியலில் முதுவர், முனைவர் பட்டங்களைப் பெற்றார். இவரது முனைவர் பட்ட ஆய்வுரை பால்வெளிகளின் கட்டமைப்பும் இயக்கவியலும் பற்றியதாகும்.
இவரது ஆராய்ச்சி அண்டவியல் சூழலில் பால்வெளிகளின் உருவாக்கமும் படிமலர்ச்சியும் ஆகும்.
- 2017: மாண்ட்பெல்லியர் வெற்றி நகரப் பள்ளி இவரது நினைவாக பிராங்குவாயிசு கோம்பெசு உயர்நிலைப் பள்ளி எனப் பெயரிடப்பட்டுள்ளது.[2]
- 2017: பிரிக்சு ஜூல்சு ஜான்சன் பரிசு, பிரெஞ்சு வானியல் கழகம்.
- 2017: கோத்தன்பர்கு பல்கலைக்கழக இலைசு மைத்னர் பரிசு[3][4][5]
- 2017: அமெரிக்க வானியல் ஒன்றியத் தகைமை உறுப்பினர்[6]
- 2015: பிரெஞ்சு தகைமை ஆணை அலுவலர்[7]
- 2013: கனடிய வானியல் கழகப் பெட்ரி பரிசு விரிவுரைத் தகைமை[8]
- 2013: அரசு வானியல் கழகத் தகைமை ஆய்வுறுப்பினர்[9]
- 2012: மூன்று இயற்பியலாளர்கள் பரிசு, ENS[10]
- 2009: தேசியத் தகைமை ஆணை அலுவலர்
- 2009: ஐரோப்பிய கல்விக்கழக உறுப்பினர்[11]
- 2003: அரசு வானியல் கழகத் தகைமை ஆய்வுறுப்பினர், 2013[12]
- 2009: ஐரோப்பிய வானியல் கழகத்தின் டைக்கோ பிராகி பரிசு[13]
- 2006: பிரெஞ்சு தகைமை ஆணை நைட் பட்டம்
- 2004: பிரெஞ்சு அறிவியல் கல்விக்கழக உறுப்பினர்[14]
- 2001: சி என் ஆர் எசு (CNRS) இன் வெள்ளிப் பதக்கம்[15]
- 1986:ஐபிஎம் ( IBM) இயற்பியல் பரிசு
இவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார்[16] மேலும் பலநூல்களையும் எழுதியுள்ளார். பல கூட்டு முயற்சிப் பணிகளிலும் இவர் பங்கேற்றுள்ளார். அவர்அது ஆங்கில நூல்களில் பின்வருவன அடங்கும்:
- "The Milky Way" (with James Lequeux), EDP Sciences, 2016, 196p (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-2759819157)
- "Galaxies and Cosmology (Astronomy and Astrophysics Library)" (with Patrick Boissé) (translator: M. Seymour), Springer, 2nd Ed 2004, 468p (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3540419273)
- "The Cold Universe: Saas-Fee Advanced Course 32, 2002. Swiss Society for Astrophysics and Astronomy" (with Andrew W. Blain) (editor: Daniel Pfenniger), Springer, 2004, (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3540408383)
- "Mysteries Of Galaxy Formation", Praxis, 2010, 224p (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1441908674)
- La Voie Lactée, 2013, (EdP-Sciences), F. Combes & J. Lequeux
- Galaxies et Cosmologie (2009), (Ellipses), F. Combes, M. Haywood, S. Collin, F. Durret, B. Guiderdoni
- A. Aspect, R. Balian, G. Bastard, J.P. Bouchaud, B. Cabane, F. Combes, T. Encrenaz, S. Fauve, A. Fert, M. Fink, A. Georges, J.F. Joanny, D. Kaplan, D. Le Bihan, P. Léna, H. Le Treut, J-P Poirier, J. Prost et J.L. Puget, Demain la physique, (Odile Jacob, 2009)
- Mystères de la formation des galaxies (2008), (Dunod), F. Combes
- Galaxies et Cosmologie (1991), (Inter-Sciences, CNRS), P. Boissé, A. Mazure et A. Blanchard
- Galaxies and Cosmology (1995), (Springer), P. Boissé, A. Mazure et A. Blanchard, (réédité en 2002)
Switzerland, Marc Türler and Mathias Beck, ISDC, Observatory of the University of Geneva. "Tycho Brahe Prize". eas.unige.ch.{{cite web}}
: CS1 maint: multiple names: authors list (link)