பிரீடல்-கிராப்ட்சு வினை
அரோமாட்டிக் வளையங்களில் பதிலிகளை பிரதியீடு செய்வதற்காக உருவாக்கப்பட்ட வினை / From Wikipedia, the free encyclopedia
பிரீடல்-கிராப்ட்சு வினைகள் (Friedel–Crafts reactions) என்பவை 1877 ஆம் ஆண்டில் சார்லசு பிரீடல் மற்றும் யேம்சு கிராப்ட்சு என்ற இரண்டு வேதியியலர்களால் உருவாக்கப்பட்ட வினைகளின் தொகுப்பாகும். அரோமாட்டிக் வளையங்களில் பதிலிகளை பிரதியீடு செய்வதற்காக இவ்வினைகள் உருவாக்கப்பட்டன [1]. பிரீடல்-கிராப்ட்சு வினைகள் இரண்டு முக்கிய வகைகளாகப் பிரிக்கப்படுள்ளன. அவை 1. ஆல்க்கைலேற்ற பிரீடல் கிராப்ட்சு வினைகள், 2. அசைலேற்ற பிரீடல் கிராப்ட்சு வினைகள் என்பவை இவ்விரண்டு வகைகளாகும். எலக்ட்ரான்கவர் அரோமாட்டிக் பதிலீடு மூலமாகவே இவ்விரண்டு வகை வினைகளும் நிகழ்கின்றன. பிரீடல் கிராப்ட்சு வினைகளின் பொது வினைத்திட்டம் கீழே தரப்பட்டுள்ளது.
பிரீடல்-கிராப்ட்சு வினைகள் தொடர்பாக பல விமர்சனங்கள் எழுதப்பட்டன [2][3][4][5].