![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/50/The_President%252C_Shri_Ram_Nath_Kovind_presenting_the_Tenzing_Norgay_National_Adventure_Award%252C_2017_to_Smt._Premlata_Agrawal_for_Land_Adventure%252C_in_a_glittering_ceremony%252C_at_Rashtrapati_Bhavan%252C_in_New_Delhi_on_August_29%252C_2017.jpg/640px-thumbnail.jpg&w=640&q=50)
பிரேமலதா அகர்வால்
From Wikipedia, the free encyclopedia
பிரேமலதா அகர்வால் (Premlata Agrawal) (பிறப்பு 1963) உலகின் ஏழு மிக உயர்ந்த கண்டச் சிகரங்களான ஏழு கொடுமுடிகளை தொட்ட முதல் இந்தியப் பெண்ணாவார். [1] மலையேற்றத்தில் இவர் செய்த சாதனைகளுக்காக இவருக்கு 2013ஆம் ஆண்டில் இந்திய அரசு பத்மசிறீ விருதையும் 2017 இல் டென்சிங் நோர்கே தேசிய சாதனை விருதையும் வழங்கியது . [2] 20 மே 2011 அன்று, உலகின் மிக உயரமான சிகரமான எவரெசுட்டு சிகரத்தை (8,848 உயரம் மீட்டர் /29,029 அடி) எட்டிய வயதான இந்தியப் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார். ஜம்மு-காஷ்மீரைச் சங்கீதா சிந்தி பகல் இவரது இந்தச் சாதனையை 19 மே 2018 அன்று முறியடித்து எவரெஸ்ட் சிகரத்தை 53 வயதில் எட்டிய மிக வயதான இந்தியப் பெண்மணி ஆனார். சார்கண்ட் மாநிலத்திலிருந்து எவரெஸ்ட் சிகரத்தை தொட்ட முதல் நபர் என்ற பெருமையையும் பெற்றார் .
பிரேமலதா அகர்வால் | |
---|---|
![]() இந்தியக் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், டென்சிங் நோர்கே தேசிய சாதனை விருதினை 2017இல் திருமதி. பிரேமலதா அகர்வாலுக்கு வழங்குகிறார். | |
பிறப்பு | பிரேமலதா கார்க் 1963 (அகவை 60–61) டார்ஜீலிங், மேற்கு வங்காளம் |
தேசியம் | இந்தியர் |
பணி | மலையேற்றம் |
அறியப்படுவது | எவரெசுட்டு சிகரத்தை (2011) தனது 48 வயதில் எட்டிய வயதான இந்தியப் பெண்மணி - உலகின் ஏழு மிக உயர்ந்த கண்டச் சிகரங்களான ஏழு கொடுமுடிகளை தொட்ட முதல் இந்தியப் பெண் |
வாழ்க்கைத் துணை | விமல் அகர்வால் |
இதற்கு முன்பு, இவர் 2004இல் நேபாளத்தில் (20,600 அடி) தீவுச் சிகரத்தை அடையும் பயணத்தில் இருந்தார். 2006இல் காரகோரம் கணவாயையும் (18,300 அடி), சால்டோரோ காங்ரி (20,150 அடி) மலைச் சிகரத்தையும் அடைந்தார். 2007ஆம் ஆண்டில் முதல் இந்திய மகளிர் தார் பாலைவன பயணத்தில் பங்கேற்றார். மீண்டும் 2015இல்; குசராத்தின் புஜ் முதல் பஞ்சாபின் வாகா எல்லை (இந்திய-பாக்க்கித்தான் எல்லை) வரை 40 நாள் ஒட்டகப் பயணத்தையும் மேற்கொண்டார். இவரது சாதனைகள் லிம்கா சாதனைகள் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. [3] [4] [5]