பிரையன் ஆக்டன்
From Wikipedia, the free encyclopedia
பிரையன் ஆக்டன் (Brian Acton) (பிறப்பு: 1972 அல்லது 1973) ஐக்கிய அமெரிக்காவின் கணினி நிரலாக்கர் மற்றும் இணைய தொழில் முனைவோர் ஆவார். இவர் அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைகழகத்தில் இளநிலை கணினி அறிவியல் பட்டத்தைப் பெற்றுள்ளார். இவர் 2018-இல் மோக்சி மர்லின்ஸ்பைக் என்பவருடன் கூட்டாக இணைந்து சிக்னல் அறக்கட்டளையை நிறுவி, அதன் செயல் தலைவராக உள்ளார்.[2][3]இவர் முன்னர் யாகூ! நிறுவ்னத்தில் பணியாற்றிவர். இவர் ஜான் கோயும் என்பவருடன் இணைந்து 2009-இல் வாட்சப் செயலியை நடத்தியவர். 2014-இல் வாட்சப் செயலியை முகநூல் நிறுவனத்திற்கு 19 பில்லியன் அமெரிக்க டாலருக்கு விற்றார். [1] செப்டம்பர் 2017-இல் பிரையன் ஆக்டன் வாட்சப் நிறுவனத்திலிருந்து வெளியேறி, 2018-இல் சிக்னல் செயலியை நிறுவினார்.[4] ஐக்கிய அமெரிககாவின் வணிக இதழான போர்ஸ் கணிப்பின் படி, பிரையன் ஆக்டன், 2020-இல் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் (நிகர சொத்து மதிப்பு 2.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) 836-வது இடத்தை கொண்டுள்ளார்.[1]
பிரையன் ஆக்டன் | |
---|---|
பிறப்பு | 1972/1973 (அகவை 51–52)[1] மிச்சிகன், ஐக்கிய அமெரிக்கா |
தேசியம் | அமெரிக்கர் |
கல்வி | இளநிலை கணினி அறிவியல் |
படித்த கல்வி நிறுவனங்கள் | இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம் |
செயற்பாட்டுக் காலம் | 1992 – தற்போது வரை |
அமைப்பு(கள்) | சிக்னல் அறக்கட்டளை |
அறியப்படுவது | இணை நிறுவனர், வாட்சப் (2009) சிக்னல் இணை நிறுவனர், சிக்னல் அறக்கட்டளை, (2018) |
சொத்து மதிப்பு | ஐஅ$2.5 பில்லியன் (ஆகஸ்டு 2020)[1] |
பட்டம் | செயல் தலைவர்[2][3] |
வாழ்க்கைத் துணை | தெகன் ஆக்டன் |