பிளாட்டீயா
கிரேக்கத்தின் தென்கிழக்கு போயோட்டியாவில் கிரீஸில் அமைந்துள்ள பண்டைய நகரம். / From Wikipedia, the free encyclopedia
பிளாட்டீயா (Plataea அல்லது Plataia, பண்டைய பண்டைக் கிரேக்கம்: Πλάταια ), மேலும் Plataeae அல்லது Plataiai ( பண்டைக் கிரேக்கம்: Πλαταιαί ), என்பது கிரேக்கத்தில் அமைந்துள்ள ஒரு பண்டைய நகரமாகும். கிரேக்கத்தில் இது தீப்சின் தெற்கே தென்கிழக்கு போயோட்டியாவில் அமைந்துள்ளது.[1] இது கிமு 479 இல் நடத்த பிளாட்டீயா போரின் களமாகும். இப்போரில் கிரேக்க நகர அரசுகளின் கூட்டணி பாரசீகர்களை தோற்கடித்தது.
கிமு 427 இல் தீப்ஸ் மற்றும் எசுபார்த்தாவால் பெலோபொன்னேசியப் போரில் பிளாட்டீயா அழிக்கப்பட்டது. மீண்டும் 386 இல் கட்டப்பட்டது. நவீன கிரேக்க நகரமான பிளாட்டீஸ் இதன் இடிபாடுகளுக்கு அருகில் கட்டப்பட்டுள்ளது.