![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/2f/Error_Function.svg/langta-640px-Error_Function.svg.png&w=640&q=50)
பிழைச் சார்பு
From Wikipedia, the free encyclopedia
கணிதத்தில் பிழைச் சார்பு அல்லது காஸ் பிழைச் சார்பு (error function, Gauss error function) என்பது நிகழ்தகவு, புள்ளியியல் பகுதிவகைக்கெழுச் சமன்பாடுகள் ஆகிய பிரிவுகளில் காணப்படும் ஒரு சிறப்புச் சார்பு ஆகும். இது கீழுள்ளவாறு வரையறுக்கப்படுகிறது[1][2]:
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/2/2f/Error_Function.svg/320px-Error_Function.svg.png)
பிழைச் சார்பு (குறியீடு: erf) :
நிரப்புப் பிழைச் சார்பு (குறியீடு: erfc) :
கற்பனை பிழைச் சார்பு (குறியீடு: erfi) :
பிழைச் சார்புக்கும் குவிவுப் பரவல் (cumulative distribution) க்குமுள்ள தொடர்பு[2]:
x இன் நேர் மதிப்புகளுக்கு, ஒரு அளவீடானது, திட்ட விலக்கம் கொண்டு இயல்நிலைப் பரவலாக அமையும் பிழைகளின் தாக்கத்தால் அதன் சராசரி மதிப்பிலிருந்து x க்கும் குறைவான தொலைவிலிருக்கும் என்ற நிகழ்தகவின் மதிப்பை,
இல் கணக்கிடப்படும் பிழைச் சார்பின் மதிப்பானது தருகிறது.[3] புள்ளியியலில், முழுத்தொகுதியின் சராசரியைப் பொறுத்து அம் முழுத்தொகுதியின் எந்தவொரு மாதிரியின் சராசரியும் எவ்வாறு இருக்கும் என்பதை முன்கூட்டியே அறிந்துகொள்ள இச் சார்பு பயன்படுத்தப்படுகிறது. குவிவுப் பரவற் சார்பின் நிரப்புச் சார்பான Q-சார்பின் பயன்பாட்டைப் போல இது அமைகிறது. Q-சார்பைப் பிழைச் சார்பின் மூலமாக எழுத முடியும்.