புனித மிக்கேல் கல்லூரி தேசியப் பாடசாலை
From Wikipedia, the free encyclopedia
புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலை (St. Michael's College National School)[2] மட்டக்களப்பு நகர மத்தியில் 1873 ஆம் ஆண்டில் இயேசு சபையினரால் ஆரம்பிக்கப்பட்ட ஆண்கள் பாடசாலையாகும். இதன் நிறுவனர் வண. பிதா. பேர்டினன்ட் பொனெல் ஆவார். இவரைத் தொடர்ந்து பல கத்தோலிக்க கிறித்தவப் பாதிரிமார்களினால் தனியார் பாடசாலையாக நடாத்தப்பட்ட இப்பாடசாலை இலங்கை விடுதலை அடைந்த பின்னர் அரசுடைமையாக்கப்பட்டது. பிறகு அரச பாடசாலையாக, 1AB தர தேசியப் பாடசாலையாக மாற்றமடைந்தது.[3] இப்பாடசாலை மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மண்முனை வடக்கு (மட்டக்களப்பு நகர்) பகுதியிலுள்ள 41 பாடசாலைகளில் ஒன்றாகும். இது தரம் 1 தொடக்கம் 5 வரையான ஆரம்பப் பிரிவினையும் தரம் 6 தொடக்கம் 13 வரையான இடைநிலை, மேல் நிலை பிரிவுகளையும் தனித்தனி வளாகங்களில் கொண்ட தேசிய பாடசாலையாகும்.[4]
விரைவான உண்மைகள் St. Michael's College National School புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலை, முகவரி ...
St. Michael's College National School புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலை | |
---|---|
முகவரி | |
அருட்தந்தை வெபர் தெரு மட்டக்களப்பு, மட்டக்களப்பு மாவட்டம் கிழக்கு மாகாணம், இலங்கை | |
அமைவிடம் | 7°42′43.17″N 81°41′47.43″E |
தகவல் | |
வகை | பொது தேசிய |
குறிக்கோள் | Quis Ut Deus (Who is like unto God?) (கடவுளுக்கு நிகர் யார்?) |
சமயச் சார்பு(கள்) | கிறித்தவம் |
மதப்பிரிவு | கத்தோலிக்க திருச்சபை |
நிறுவல் | 1873[1] |
நிறுவனர் | வண. பிதா பேர்டினன்ட் பொனெல் |
நிலை | 1961 இல் தேசியமாக்கப்பட்டது |
பள்ளி மாவட்டம் | மட்டக்களப்பு கல்வி வலயம் |
ஆணையம் | கல்வி அமைச்சு |
தரங்கள் | 1-13 |
பால் | ஆண்கள் |
வயது வீச்சு | 5-19 |
மொத்த சேர்க்கை | 3,000+ |
மொழி | ஆங்கிலம், தமிழ் |
இல்லங்கள் | பொனெல், மரியான், மில்லர், கிரவுதர் |
சுலோகம் | A College second to none |
கீதம் | Sons of Bless'd St.Michael புனித மிக்கேலின் புதல்வர் நாம் |
விளையாட்டுக்கள் | கூடைப்பந்தாட்டம், துடுப்பாட்டம், டென்னிசு |
Yearbook | பாடுமீன் |
இணையம் | http://smcb.lk |
மூடு