புறாத்து ஆறு
From Wikipedia, the free encyclopedia
புராத்து ஆறு (அரபு மொழி: الفرات: al-Furāt, எபிரேயம்: פרת: Prat, துருக்கியம்: Fırat, குர்தியம்: Firat) அல்லது இயூபிரட்டீசு ஆறு (/juːˈfreɪtiːz/ (கேட்கⓘ), Euphrates) , மேற்கு ஆசியாவில் பாயும் ஆறுகளில் மிகவும் நீளமானதும், வரலாற்று அடிப்படையில் மிகச் சிறப்புப் பெற்றதுமான ஒரு ஆறு ஆகும். இப்பகுதியில் ஓடும் டைகிரிசு என்னும் ஆற்றுடன் சேர்ந்து இந்த ஆறு, மிகப்பழைய நாகரிகப் பகுதிகளுள் ஒன்றாகிய மெசொப்பொத்தேமியாவை வரையறை செய்கிறது. துருக்கியில் ஊற்றெடுக்கும் இயூபிரட்டீசு, சிரியா, ஈராக் ஆகிய நாடுகளூடாகப் பாய்ந்து, டைகிரிசு ஆற்றுடன் இணைந்து, சாட்-அல்-அராப் ஆற்றின் (Shatt al-Arab) ஊடாகப் பாரசீகக் குடாவில் கலக்கின்றது. இந்த ஆற்றின் நீளம் 2,800 கிமீ ஆகும்.
விரைவான உண்மைகள் நாடுகள், வடிநிலப் பகுதி ...
புராத்து | |
அரபு மொழி: الفرات: al-Furāt[1], துருக்கியம்: Fırat[1], குர்தியம்: Firat, Syriac: ܦܪܬ: Prath, எபிரேயம்: פרת Prat | |
ஆறு | |
சிரியாவின் அலபியே என்னும் இடத்துக்கு அருகில் இயுபிரட்டீசு. | |
பெயர் மூலம்: பழைய பாரசீக உஃபராத்து விலிருந்து இடைகாலப் பாரசீக ஃப்ரட் ஊடாக துருக்கிய ஃபிராட் க்கு[1] | |
நாடுகள் | ஈராக், சிரியா, துருக்கி |
---|---|
வடிநிலப் பகுதி | துருக்கி, சிரியா, ஈராக், சவூதி அரேபியா, குவைத் |
கிளையாறுகள் | |
- இடம் | பலிக், காபூர் ஆறு |
- வலம் | சஜுர் |
நகரங்கள் | பிரெசிக், அர்-ரக்கா, டெயிர் எசு-சோர், மயாடின், அடித்தா, ரமாடி, அபானியா, ஃபலூஜா, குஃபா, சமாவா, நசிரியா |
அடையாளச் சின்னங்கள் |
ஆசாத் ஏரி, கடீசியா ஏரி, அப்பானியா ஏரி |
உற்பத்தியாகும் இடம் | |
- அமைவிடம் | முரத் சூ, thurukki |
- உயர்வு | 3,520 மீ (11,549 அடி) |
Secondary source | |
- location | கர சூ, துருக்கி |
- உயர்வு | 3,290 மீ (10,794 அடி) |
Source confluence | |
- location | கெபான், துருக்கி |
- உயர்வு | 610 மீ (2,001 அடி) |
கழிமுகம் | சாட் அல்-அராப் |
- அமைவிடம் | அல்-குர்னா, பாசுரா ஆளுனரகம், ஈராக் |
- ஆள்கூறு | 31°0′18″N 47°26′31″E |
நீளம் | 2,800 கிமீ (1,740 மைல்) அண்ணளவு. |
வடிநிலம் | 5,00,000 கிமீ² (1,93,051 ச.மைல்) அண்ணளவு. |
Discharge | for Hīt |
- சராசரி | |
- மிகக் கூடிய | |
- மிகக் குறைந்த | |
திஜ்லா - புராத்து ஆறுகளின் வடிநிலப் படம் (மஞ்சள் நிறத்தில்)
| |
விக்கிமீடியா பொது: புராத்து | |
மூடு