புளூடூத்
குறைந்த தொலைவு பயன்படும் கம்பியிலி தொழில்நுட்பம் / From Wikipedia, the free encyclopedia
புளூடூத் (Bluetooth) அல்லது நீலத்தொடர்பியல் அல்லது அண்புலனி என்பது குறுகிய தொலைவு கம்பியிலா தொழில்நுட்பத் தொடர்பியல் செந்தரமாகும். இது நிலைத்த கருவிக்கும் நகரும் கருவிவிக்கும் இடையில் குறுகிய தொலைவுக்குத் தரவைப் பரிமாறிக்கொள்ளவும் தனியர் பகுதிப் பிணையங்களை உருவாக்கவும் பயன்படுகிறது. கம்பியில்லா தனியர் பகுதிப் பிணையங்களில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தும் முறைமையில் , நீலத்தொடர்பியல் பரிமாற்றத் திறன் வரம்பு 2.5 மில்லிவாட்டுகள் ஆகும். இது 10 மீட்டர் (33 அடி) வரை மிகக் குறுகிய தொலைவுக்கே தொடர்பை வழங்குகிறது. இது மீவுயர் அலைவெண் வானொலி அலைகளைப் ஐஎசுஎம் அலைவரிசையில் பயன்படுத்துகிறது. .[1] இது முதன்மையாக,அருகிலுள்ள சிறிய கருவிகளுக்கு இடையில் கோப்புகளைப் பரிமாறவும் , அலைபேசி, இசைத்தட்டுகளைக் கம்பியில்லாத தலையணிகளுடன் இணைக்கவும் கம்பி இணைப்புகளுக்கு மாற்றாக பயன்படுகிறது.
புளூடூத் தொலைத்தொடர்பு , கணினிப் பிணையம், நுகர்வோர் மின்னனியல் ஆகிய துறைகளில் 35,000 க்கும் மேற்பட்ட உறுப்பினர் நிறுவனங்களைக் கொண்ட சிறப்பு ஆர்வக் குழுவால் (SIG) புளூடூத் மேலாளப்படுகிறது. பன்னாட்டு மின், மின்னனியல் கழகம்(IEEE) புளூடூத்தை IEEE 802.15.1 செந்தரம் வழியாக தரப்படுத்தியது. ஆனால் இக்கழகம் புளூடூத்தின் தரத்தைப் பேணுவதில்லை. இதை சிறப்பு ஆர்வலர் குழு(ஸ்ஐஜி) IEEE 802.15.1 செந்தரத்தின்படி இதன் வளர்ச்சியை மேற்பார்வைன்ட்டு வணிக இலச்சினைகளையும் பேணுகிறது. .[2] ஒரு புளூடூத்தை ஒரு கருவியாகச் சந்தைப்படுத்த ஓர் ஆக்க்கக்குழுமம் புளூடூத்தின் செந்தரங்களை நிறைவு செய்ய வேண்டும். .[3] தனிப்பட்ட தகுதி கருவிகளின் உரிமம் பெற்ற தொழில்நுட்பத்திற்குக் காப்புரிமைகளின் பிணையம் பொருந்தும். 2021 ஆம் ஆண்டு காப்புரிமைகள் நிலவரப்படி ஆண்டுதோறும் 4 பில்லியன் புளூடூத் ஒருங்கிணைந்த சுற்றுச் சில்லுகள் விற்கின்றன. .[4] பிறப்பிடம்: 1989 இல் சுவீடனில் லுண்ட் என்கிற நகரத்தில், எரிக்சன் மொபைல் நிறுவனத்தில் நில்சு ரைட்பெக் (CTO), மற்றும் ஓகன் உல்மான் ஆகியவர்களால் வேலை தொடங்கப்பட்டது. இரண்டு காப்புரிமைகல் (SE 8902098-6, 1989-06-12 மற்றும் SE 9202239, 1992-07-24) வெளியிட பட்டன. இந்த இரண்டு காப்புரிமைகள் படி, கம்பியில்லா செவிப்பொறி உருவாக்குவதுதான் இந்த வேலையின் நோக்கம். டோற்ட் விங்ரென், சாப் ஆற்சன், மற்றும் சிவென் மேட்டிசன் ஆகியவர்கள் இந்த வேலையில் ஈடுபட்டார்கள். இந்த தொழில்நுட்பம் UHFஐ அடிப்படையாக கொண்டிருக்கும் என்று முடிவு செய்தார்கள்.
இந்த தொழில்நுட்பத்தின் பெயர் பத்தாம் நூற்றாண்டு மன்னர் அரால்டு புளுடூத் அவர்களின் பெயர் ஆகும். இவர் பல டேனிசு பழங்குடியினரை ஒற்றைப் பேரரசாக இணைத்தார். புளுடூத் தொடர்பு பல நெறிமுறைகளை ஒருங்கிணைக்கிறது என்பதை இந்த பெயர் காட்டுகிறது[5].
1997 ஆம் ஆண்டு இன்டெல்லின் சிம் கர்தாச் இந்தப் பெயரைப் பரிந்துரைத்தார். அவரும் கைப்பேசிகளைக் கணினியுடன் தொடர்புகொள்ளும் தொழில்நுட்பத்தை உருவாக்கிக்கொண்டிருந்தார்[10]. அந்தக் காலத்தில் அவர் அரால்டு புளூடூத் மன்னரைப் பற்றிப் பிரான்சு சி. பெண்டசான் எழுதிய வரலாற்றுப் புதினத்தைப் (The Long Ships) படித்துக்கொண்டிருந்தார்.
புளூடூத் எனும் அண்புலனி 2402-2480 மெகாஏர்ட்சு அல்லது 2400-2483.5 மெகாஏர்ட்சு அலைவரிசைகளில் இயங்குகிறது. இது ஒரு கட்டுப்படுத்தப்படாத அலைவரிசை. புளூடூத் வழியாகப் பரிமாற்றப்படும் தரவுகள் பொட்டணங்களாக பிரிக்கப்படுகிறது. ஒவ்வொரு பொட்டணமும் 79 ஒதுக்கப்பட்ட புளூடூத் அலைவரிசைகளில் ஒன்று வழி அனுப்பப்படுகிறது. ஒவ்வொரு அலைவரிசைக்கும் 1 MHz அலைவரிசை கொடுத்திருக்கிறார்கள். வழக்கமாக நொடிக்கு 800 முறை அலைவரிசை மாற்றப்படுகிறது. இந்த விதமான தொழில்நுட்பம் அலைவெண் மிதப்புமுறை என்று சொல்லப்படுகிறது[15]. புளூடூத் தாழ் ஆற்றல் செந்தரம் ஒவ்வொரு அலைவரிசைக்கும் 2 மெகா ஏர்ட்சு அலைப்பட்டையைக் கொடுக்கிறது. இது 40 இது 40 அலைவரிசைகளுக்கு இடமளிக்கிறது..