பைரோபாசுபாரிக் காடி
From Wikipedia, the free encyclopedia
பைரோபாசுபாரிக் காடி (Pyrophosphoric acid) H4P2O7 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இருபாசுபாரிக் காடி, பைரோபாசுபாரிக் அமிலம், இருபாசுபாரிக் அமிலம் என்ற பெயர்களாலும் இதை அழைக்கலாம். [(HO)2P(O)]2O. என்று விரிவாகவும் இதன் மூலக்கூற்று வாய்ப்பாட்டை விளக்கியும் எழுதலாம். பைரோபாசுபாரிக் காடி மணமற்றதாகவும் நிறமற்றதாகவும் காணப்படுகிறது. தண்ணீர், டை எத்தில் ஈதர் மற்றும் எத்தில் ஆல்ககால் போன்ற கரைப்பான்களில் கரைகிறது.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்s
இருபாசுபாரிக் காடி μ-ஆக்சிடோ-பிசு(ஈரைதராக்சிடோ ஆக்சிடோபாசுபரசு) | |
வேறு பெயர்கள்
இருபாசுபாரிக் அமிலம் | |
இனங்காட்டிகள் | |
2466-09-3 Y | |
ChEBI | CHEBI:29888 Y |
ChEMBL | ChEMBL1160571 Y |
ChemSpider | 996 Y |
IUPHAR/BPS |
3151 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 1023 |
| |
UNII | 4E862E7GRQ Y |
பண்புகள் | |
H4P2O7 | |
வாய்ப்பாட்டு எடை | 177.97 கி/மோல் |
உருகுநிலை | 71.5 °C (160.7 °F; 344.6 K) |
நன்றாக கரையும் | |
கரைதிறன் | ஆல்ககால், ஈதர் போன்றவற்றில் நன்றாகக் கரையும் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
நீரற்ற நிலை பைரோபாசுபாரிக் அமிலம் இரண்டு வெவ்வேறு வடிவங்களில் படிகமாகிறது. இவை முறையே 54.3 மற்றும் 71.5 °செல்சியசு வெப்பநிலையில் உருகுகின்றன. பைரோபாசுபாரிக் காடி பாசுபாரிக் அமிலத்தை தயாரிக்க உதவும் முக்கிய ஆதாரமான பாலிபாசுபாரிக் அமிலத்தின் ஒரு அங்கமாகும்.[1] பைரோபாசுபாரிக் காடியின் எதிர்மின் அயனிகள், உப்புகள், எசுத்தர்கள் போன்றவற்றை பைரோபாசுபேட்டுகள் என்று அழைப்பர்.