மலேசியாவில் இசுலாம்
From Wikipedia, the free encyclopedia
பல சமயங்கள் பின்பற்றப்படும் மலேசியா வில் முதன்மை சமயமாக இருப்பது இசுலாம் ஆகும். 2013 நிலவரப்படி, இந்நாட்டில் ஏறத்தாழ 19.5 மில்லியன் (கிட்டத்தட்ட மக்கள்தொகையில் 61.3%) இசுலாமியர்கள் வாழ்கின்றனர்.[1] இவர்களில் பெரும்பான்மையோர் இசுலாத்தின் சுன்னி இசுலாம் பிரிவைச் சேர்ந்தவர்களாவர்.[2] இதனால் மலேசியா " ஓர் இசுலாமியப் பெரும்பான்மை நாட்டில் சியா இசுலாமியர் தடை செய்யப்பட்டுள்ளதற்கு" எடுத்துக்காட்டாக உள்ளது.[3]
மலேசியாவின் அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 3 இன்படி "கூட்டாட்சியின் சமயமாக" நிறுவப்பட்டுள்ளது.[4][5] ஆனால் மலேசியச் சட்டமும் சட்ட முறைமையும் ஆங்கிலப் பொதுச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளன. இசுலாமியச் சட்ட முறைமை இசுலாமியருக்கு மட்டுமே நடைமுறையில் உள்ளது; அதுவும் குடும்பச் சட்டம் மற்றும் சமயப் பின்பற்றுதல்களுக்கு மட்டுமே பின்பற்றப்படுகின்றது. இதனால் மலேசியா மதசார்பற்ற நாடா அல்லது இசுலாமிய நாடா என்ற சர்ச்சை உள்ளது.