மார்லீன் டீட்ரிக்
ஜெர்மன் மற்றும் அமெரிக்க நடிகை மற்றும் பாடகி / From Wikipedia, the free encyclopedia
மர்லீன் டீட்ரிக், (Marlene Dietrich - டிசம்பர் 27 1901–மே 6 1992) ஜெர்மனியில் பிறந்த அமெரிக்க நடிகையும் பாடகியும் ஆவார்.[1][2][3] 1910 ஆம் ஆண்டு முதல் 1980 வரை இவருடைய திரைத் தொழில் வரலாற்றில் புகழ் மங்காத வகையில் புதுமையைக் கையாண்டு வந்தார். ஹாலிவூட்டில் பிரபலமான முதல் ஜேர்மன் நடிகை இவர் எனக் கருதப்படுகிறது. இவரது நீண்டகால நடிப்புத் தொழிலில் இவர் தொடர்ச்சியாகப் புகழ் பெற்றவராகவே இருந்தார். 1920 ஆம் ஆண்டளவில் இவர் பெர்லின் நகரில் ஒரு காபரேப் பாடகியாகவும், திரைப்பட நடிகையாகவும் இருந்தார். 1930 இல் இவர் ஒரு ஹாலிவூட் நடிகை ஆனதுடன், இரண்டாம் உலகப் போர் முன்னரங்கப் பகுதிகளில் நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். போரின் போது மக்களுக்கு ஆற்றிய சேவைகள் காரணமாக இவருக்கு அமெரிக்கா, பிரான்சு, பெல்சியம், இசுரேல் ஆகிய நாடுகள் கௌரவிப்புக்களை வழங்கின. பின்னர் 1950–1970 காலப்பகுதியில் அனைத்துலக அளவில் மேடை நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். தனது தொழில் வாழ்க்கையின் இறுதிக் காலத்தில் இவர் பொழுது போக்குத் துறையின் குறியீடாக விளங்கினார். 1999 ஆம் ஆண்டில் அமெரிக்க திரைப்பட நிறுவனம் டீட்ரிக் இனை தலைசிறந்த ஒன்பதாம் ஹொலிவூட் நடிகையாக பிரகடனம் செய்தது.[4]
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
மர்லீன் டீட்ரிக் | ||||||
---|---|---|---|---|---|---|
மேடைப் பயம் என்னும் ஆங்கிலப் படத்தில் (1950) | ||||||
இயற் பெயர் | மாரீ மகதலீன் டீட்ரிக் | |||||
பிறப்பு | (1901-12-27)27 திசம்பர் 1901 பெர்லின்-சோபேர்க், ஜெர்மனி | |||||
இறப்பு | 6 மே 1992(1992-05-06) (அகவை 90) பாரிஸ், பிரான்ஸ் | |||||
நடிப்புக் காலம் | 1919–1984 | |||||
துணைவர் | ருடோல்ப் சீபர் (1924–1976) | |||||
பிள்ளைகள் | மரியா ரீவா (b. 1924) | |||||
இணையத்தளம் | http://www.marlene.com/ | |||||
|