மி டூ இயக்கம்
From Wikipedia, the free encyclopedia
மி டூ இயக்கம் அல்லது நானும் பாதிக்கப்பட்டேன் (#MeToo movement) என்பது உலக அளவில், பணியிடங்களில் பெண்கள் தங்களுக்கு எதிராக நடந்த பாலியல் துன்புறுத்தல்[1] மற்றும் பாலியல் தாக்குதல்களை [2][3][4][5] டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்கள் மூலம் வெளியுலகிற்கு அம்பலப்படுத்தும் முறையை நோக்கமாக இயக்கமாகும்.
மி டூ இயக்கத்தை அமெரிக்க நாட்டின் சமூக ஆர்வலரும், சமூக ஏற்பாட்டாளருமான தாரன புர்கே என்பவர் முதன்முதலில் 2006 இல் "Me Too" எனும் சொற்றொடர் மூலம் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளை சமூக ஊடகங்கள் மூலம் வெளிக்கொணர்ந்தார்.[6] பின்னர் ஹாலிவுட் நடிகை அலிசா மிலனோ என்பவர் தனக்கு யார்யாரால் பாலியல் துன்புறுத்தல்கள் நேர்ந்தது குறித்து, டுவிட்டர் மூலம் வெளிப்படுத்தினார்.
மிலானோ மற்றும் மைக்கேல் பேக்கர் போன்றோர், பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்களை, டுவிட்டர் மூலம் தங்களுக்கு யாரால், எவ்வாறு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டோம் என்பதை வெளியிட ஊக்குவித்தனர். இதன் மூலம் "பிரச்சனையின் அளவை மக்கள் உணர்கிறார்கள்" என்றார்கள்.[7][8]
2017 ஆம் ஆண்டு மி டூ இயக்கத்த்தின் தாக்கத்தால், கிவ்வினெத் பேல்ட்ரோ[9] எனும் ஹாலிவுட் நடிகை, 1996இல் எம்மா எனும் திரைப்படத்தில் நடித்த போது, அதன் தயாரிப்பாளர் ஹர்வெய் வெய்ன்ஸ்டெய்ன் தனக்கு இழைத்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து டுவிட்டர் மூலம் தனது துயரங்களை மக்களிடம் வெளிப்படுத்தினார்.[10]
2017 இல் நடிகை அலிஸ்சா மிலனோ முதன்முதலில் டுவிட்டரில் #Me Too குறியிட்டு, நடிகர் ஹார்வி வெனிங்ஸ்டனால் தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து செய்தி வெளியிட்டார்.