மெக்சிக்கோ நகரம்
From Wikipedia, the free encyclopedia
மெக்சிகோ நகரம் (எசுப்பானியம்: Ciudad de México, எசுப்பானிய ஒலிப்பு: [sjuˈða(ð) ðe ˈmexiko] ( கேட்க);[2]) மெக்சிகோ நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும்.[3] மெக்சிக்கோ நகரமானது மெக்சிகன் கூட்டாட்சி ஒன்றியத்தின் தலைநகராக விளங்குகிறது. இது 31 மெக்சிகன் மாநிலங்களில் எந்த ஒரு பகுதியாகவும் இல்லாமல் தன்னிச்சையான ஒரு கூட்டாட்சி அரசு அமைப்பாக உள்ளது. இதனால் மெக்சிக்கோ, கூட்டரசு மாவட்டம் எனவும் அழைக்கப்படுகின்றது. மெக்சிக்கோ நகரம் அந்நாட்டின் மிகப்பெரிய நகரமாகவும் மற்றும் அதன் மிக முக்கியமான, அரசியல், கலாச்சார, கல்வி மற்றும் நிதி மையமாக திகழ்கிறது.
மெக்சிகோ நகரம் சியுடாட் டெ மெக்சிக்கோ | |
---|---|
மெக்சிக்கோ நகரம் Mexico City [1] | |
மேலிருந்து டோர் இலாத்தினமெரிக்கானா, மெக்சிக்கோ நகர மெட்ரோபாலிட்டன் கதீட்ரல், அனில்லோ பெரிபெரிக்கோ, உலக வர்த்தக மையம் மெக்சிக்கோ நகரம், விடுதலை தேவதை, சாப்பல்டெபெக் கோட்டை, செயின்ட் ரெஜிசு தங்குவிடுதி கோபுரம் மற்றும் டோர் மேயர், பாசியோ டெ லா ரிபார்மா மற்றும் பலேசியோ டெ பெல்லாசு ஆர்த்தெ வான்காட்சி. | |
அடைபெயர்(கள்): சியுடாட் டெ லோசு பலாசியோசு (அரண்மனை நகரம்) | |
மெக்சிக்கோ நாட்டினுள் மெக்சிக்கோ நகரத்தின் அமைவிடம் | |
நாடு | மெக்சிகோ |
கூட்டாட்சி பிரிவு | கூட்டாட்சி மாவட்டம் |
தோற்றம் | c.மார்ச் 18, 1325 (டெனோக்டிட்லான் என்று) |
புது ஸ்பெயினின் நகரம் | 1524 |
கூட்டாட்சி மாவட்டம் | 1824 |
அரசு | |
• வகை | குடியரசு |
• ஆட்சி தலைவர் | மார்செலோ எப்ரார்ட் (PRD) |
பரப்பளவு1 | |
• நகரம் | 1,479 km2 (571 sq mi) |
ஏற்றம் | 2,240 m (7,349 ft) |
மக்கள்தொகை (2010) | |
• நகரம் | 8,851,080 |
• அடர்த்தி | 5,741/km2 (14,870/sq mi) |
• பெருநகர் | 1,92,31,829 |
• மக்கள் | "டெஃபேஞோ", "சிலாங்கோ", "காபிடலீஞோ" |
நேர வலயம் | நடு (ஒசநே-6) |
• கோடை (பசேநே) | நடு (ஒசநே-5) |
இணையதளம் | http://www.df.gob.mx |
1 பரப்பளவில் கூட்டாட்சி மாவட்டத்தின் தென் பகுதியின் கிராமாந்திரங்களை எண்ணவில்லை |
உலகின் மேற்கு அரைக்கோளத்தில் மிகப்பெரிய மாநகரமும், மக்கள்தொகை அடிப்படையில் உலகிலேயே இரண்டாம் மிகப்பெரிய மாநகரமும் ஆகும்[4][5] . முதல் இடத்தில் யப்பானின் டோக்கியோ மாநகரும் மூன்றாம் இடத்தில் இந்தியாவின் மும்பையும் உள்ளன.
வட அமெரிக்காவின் மிக முக்கியமான நிதி மையங்களில் இந்த நகரம் ஒன்றாகும். மெக்சிக்கோ பள்ளத்தாக்கின் மத்தியில் அமைந்துள்ள உயர் பீடபூமியின் 2.240 மீட்டர் (7,350 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. நகரம் 16 நிர்வாகப் பிரிவுகளாக (பரோக்களாக) பிரிக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த மக்கட்தொகையானது 2009ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 8.84 மில்லியன் ஆகும்.
2011 இல் $ 411 பில்லியன் அமெரிக்க டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மூலம் மெக்சிக்கோ நகரம் உலகின் பணக்கார பெருநகர பகுதிகளில் ஒன்றாகத் திகழ்கிறது. இந்நகரம் மெக்சிக்கோ நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 21% மற்றும் பெருநகர பகுதிகளுக்கான மொத்த தேசிய உள்நாட்டு உற்பத்தியில் 34% பங்கும் வகிக்கின்றது.
மெக்சிக்கோ பெருநகரத்தின் மொத்த உள்ளக உற்பத்தி, 2011இல், அமெரிக்க$411 பில்லியனாக இருந்தது; உலகின் செல்வமிக்க பெருநகரங்களில் ஒன்றாக உள்ளது.[6] மெக்சிக்கோ நாட்டின் நிகர உற்பத்தியில் இந்த நகரம் 15.8% பங்களிக்கின்றது.[7] இந்த நகரத்தின் பொருளாதாரம், தனிநாடாக இருப்பின், இலத்தீன் அமெரிக்காவில் ஐந்தாவதாக உள்ளது; கோஸ்ட்டா ரிக்காவினுடையதைப் போல ஐந்து மடங்காகவும் பெருவின் பொருளாதாரத்திற்கு சமனாகவும் உள்ளது.[8]
இந்த நகரம் அமெரிக்காக்களின் தொன்மைவாய்ந்த நகரங்களில் ஒன்றாக விளங்குகின்றது. பழங்குடி மக்களால் நிறுவப்பட்ட இரு நகரங்களில் ஒன்றாகவும் விளங்குகின்றது. 1325இல் அசுடெக் காலத்தில் டெக்சுகோகோ ஏரியின் தீவொன்றில் நிறுவப்பட்டது.1521இல் இது முழுமையாக அழிக்கப்பட்டு எசுப்பானிய ஊரகத் தரத்தின்படி மீண்டும் கட்டப்பட்டது. 1524இல் மெக்சிக்கோ நகராட்சி நிறுவப்பட்டது.[9] எசுப்பானிய குடியேற்றப் பேரரசின் அரசியல், நிர்வாக, நிதிய மையமாக மெக்சிக்கோ நகரம் விளங்கியது.[10] எசுப்பானியாவிலிருந்து விடுதலை பெற்ற பின்னர் 1824ஆம் ஆண்டில் கூட்டரசு மாவட்டம் உருவாக்கப்பட்டது.
பல ஆண்டுகளாக அரசியல் தன்னாட்சிக்கு போராடிய பின்னர் 1997இல் கூட்டரசு மாவட்டதின் தலைவரை நேரடித் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கவும் ஓரவையுள்ள சட்டப்பேரவைக்கு பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கவும் உரிமை பெற்றது. இடதுசாரிக் கட்சியான சனநாயகப் புரட்சிக் கட்சி இவ்விரண்டையும் கைப்பற்றியுள்ளது.[11] ஆண்மை ஆண்டுகளில் பல தாராளமயக் கொள்கைகள் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன; கோரிக்கை அடிப்படையில் கருக்கலைப்பு, கட்டுப்பட்டளவில் வதையா இறப்பு, தவறின்றியும் மணமுறிவு, தற்பால் திருமணம் ஆகியன அனுமதிக்கப்படுகின்றன.