![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/45/Palace_of_Nestor_mausoleum_%25282%2529.jpg/640px-Palace_of_Nestor_mausoleum_%25282%2529.jpg&w=640&q=50)
மெசீனியா (பண்டைய பிராந்தியம்)
பணைடய கிரேக்க பிராந்தியம் / From Wikipedia, the free encyclopedia
மெசீனியா (Messenia அல்லது Messinia, கிரேக்கம்: Μεσσηνία ) என்பது பண்டைய கிரேக்கத்தின் தென்மேற்கு பெலோபொன்னீசின் ஒரு பண்டைய மாவட்டமாகும். இது கிரேக்கத்தின் நவீன மெசேனியா நிலப் பகுதியை கூடியோ, குறைத்தோ கொண்டதாக உள்ளது. இதன் எல்லையாக வடக்கே நெடா ஆறு பாய்கிறது. அந்த ஆறு எலிசுடனான எல்லையாக உள்ளது. அங்கிருந்து ஆர்காடியாவுடனான எல்லையானது எலியாம் மலை மற்றும் நோமியா மலையின் உச்சியில் இருந்து, பின்னர் டெய்கெட்டஸின் அடிவாரம் வழியாக செல்கிறது. லாகோனியாவுடனான கிழக்கு எல்லையானது டெய்கெட்டஸ் முகடு வழியாக கோஸ்கரகா ஆறு வரை சென்று, பின்னர் அந்த ஆற்றின் வழியாக அபியா நகருக்கு அருகில் கடல்வரை சென்றது.
விரைவான உண்மைகள் மெசீனியா Μεσσηνία, Location ...
மெசீனியா
Μεσσηνία | |
---|---|
பண்டைக் கிரேக்க பிராந்தியம் | |
![]() Burial chamber, Pylos | |
![]() Map of ancient Messenia | |
Location | Peloponesse |
Major cities | Messene |
Dialects | Doric |
மூடு
பண்டைய மெசீனியாவானது பெயர் மாற்றம் இல்லாமல், அதே பெயரில் கிரேக்கத்தின் நவீன பிராந்திய அலகாக சிறிய அளவிலான மாற்றத்துடன் தொடர்ந்து உள்ளது.