மேரி ரீட்
ஆங்கில கடல்கொள்ளைக்காரி / From Wikipedia, the free encyclopedia
மேரி ரீட் ( Mary Read ) ( பிறப்பு: தெரியாது - 28 ஏப்ரல் 1721), கற்பனையாக [1] மார்க் ரீட் என்றும் அழைக்கப்படும் இவர் ஒரு ஆங்கிலக் கடற்கொள்ளைக்காரி ஆவார். இவரைப் பற்றி மிகக் குறைவான ஆவணங்களே உள்ளன. இவரும் ஆன் போனியும் 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டு பிரபலமான பெண் கடற்கொள்ளையர்களாக இருந்தனர். மேலும் “கடற்கொள்ளையின் பொற்காலம்” என அறியப்பட்ட காலத்தில் கடற்கொள்ளைக்கு தண்டனை பெற்றதாக அறியப்பட்ட சில பெண்களில் இவரும் ஒருவர்.
மேரி “மார்க்” ரீட் | |
---|---|
ஒரு கடற்கொள்ளையரை மேரி ரீட் (வலது) கொல்வதாக 1842 ஆம் ஆண்டு ஓவியம் | |
பிறப்பு | சுமார் 1680–1695 இங்கிலாந்து இராச்சியம் |
இறப்பு | 28 ஏப்ரல் 1721 (வயது 26–41) போர்ட் ராயல், ஜமைக்கா குடியேற்றம் |
கல்லறை | புனித கேத்தரின் தேவாலயக் கல்லறை, ஜமேக்கா |
கடற் கொள்ளை தொடர்பில் | |
வகை | கடல் கொள்ளை |
கூட்டு | ஆலந்தில் ஆங்கிலேயருடன் இணைந்த காலாட்படை மற்றும் குதிரைப்படை |
இயங்கிய காலம் | அண். 1708–1721 |
செயற்பாட்டுக் களம் | கரிபியன் |
மேரி ரீட் 1680 மற்றும் 1693 க்கு இடையில் இங்கிலாந்தில் பிறந்தார். லோர் வாரிசுப் பணத்தைப் பெறுவதற்காக முதலில் தனது தாயின் வற்புறுத்தலின் பேரிலும், பின்னர் பிரித்தானிய இராணுவத்தில் சேர்வதற்காகவும் தனது இளம் வயதிலேயே இவர் ஒரு ஆணுக்குரிய உடை அணியத் தொடங்கினார். [2] பின்னர் இவர் திருமணம் செய்து கொண்டார். தனது கணவர் இறந்தவுடன் 1715 இல் மேற்கிந்திய தீவுகளுக்கு சென்றார். சுமார் 1720 ஆம் ஆண்டில், இவர் கடற்கொளாளையரான ஜாக் ராக்காமைச் சந்தித்து அவரது குழுவினருடன் சேர்ந்தார். இவருடன் ஆன் போனியும் ஆணாக உடை அணிந்து கடற்கொளையில் ஈடுபட்டார். இவர்கள் மூவரும் குறுகிய காலமே சேர்ந்து இருந்தனர்.