மௌ. கொ. எசர்
From Wikipedia, the free encyclopedia
மௌரிட்சு கோர்னெலீசு எசர் (Maurits Cornelis Escher; (டச்சு ஒலிப்பு: [ˈmʌurɪts kɔrˈneːlɪs ˈɛsxər]; 17 சூன் 1898 – 27 மார்ச்சு 1972) ஓர் இடச்சு வரைகலைஞர். இவர் கணிதக் கருத்துக் கோட்பாடுகளால் உந்தப்பட்டு மரத்தில் கீறியும் செதுக்கியும், கல் அல்லது மாழை அச்சுகள் வழியாகவும் (இலித்தோகிராஃபி), சொரசொரப்பூட்டப்பட்ட மாழை வழியாகச் செய்யும் மேசோட்டிண்டு (mezzotint) என்னும் முறைப்படியும் வரைகலை வடிப்புகள் செய்தார்.
மௌ. கொ. எசர் M. C. Escher | |
---|---|
1971 இல் | |
பிறப்பு | மௌரிட்சு கொர்னெலீசு எசர் (Maurits Cornelis Escher) (1898-06-17)17 சூன் 1898 Leeuwarden, Netherlands |
இறப்பு | 27 மார்ச்சு 1972(1972-03-27) (அகவை 73) ஃகில்வெர்சம், நெதர்லாந்து |
கல்லறை | பாரன், நெதர்லாந்து |
தேசியம் | இடச்சு |
கல்வி | தெல்ஃப்டு தொழினுட்பப் பல்கலைக்கழகம் Haarlem School of Architecture and Decorative Arts |
அறியப்படுவது | படம்வரைதல், அச்சாக்கம் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | Hand with Reflecting Sphere (1935) சார்பியல் (மௌ.கொ. எசர்) (1953) அருவி (1961) |
வாழ்க்கைத் துணை | யெட்டா உமிக்கெர் (தி. 1924) |
பிள்ளைகள் | 3 |
விருதுகள் | Knight (1955) and Officer (1967) of the Order of Orange-Nassau |
இவருடைய படைப்புகள் கணிதக் கருத்துகளின் உருப்படிகளாகவும் இயக்கங்களாகவும் இருந்தன. இவற்றுள் இருக்கமுடியாத உருப்படிகள், முடிவிலி, எதிரொளிப்பு, ஒற்றியம் (symmetry), உள்வாங்கும் பார்வைக்கோணம், நறுக்கப்பட்ட வடிவம், இருதிரட்சி முத்திரட்சி வடிவங்கள், இலோபாசெவ்சிக்கி வடிவவியல் (Lobachevskian geometry) தரைபாவுமைகள் (tessellations) முதலியன அடங்கும். எசர் தனக்குக் கணித அறிவோ திறமையோ இல்லை என்று கருதினாலும், பல கணிதவியலாளருடன் உறவாட்டத்தில் இருந்தார். அவர்களுள் சியார்ச்சுபோல்யா (George Pólya), ஊரோச்சர் பென்ரோசு (Roger Penrose), ஆரால்டு கோக்சீட்டர் (Harold Coxeter]), படிகவியலாளர் பிரீடிரிச்சு ஃகாகு Friedrich Haag). படிகவியலாளருடன் இவர் தரைபாவுமைகள் பற்றிய தன் சொந்த ஆய்வைச் செய்தார்.