யூனோ (விண்கலம்)
From Wikipedia, the free encyclopedia
யூனோ (Juno; ஜூனோ) என்பது அமெரிக்காவின் நாசா நிறுவனத்தின் வியாழனைச் சுற்றிவரும் ஒரு விண்ணுளவி ஆகும். உரோமைத் தொன்மவியலின் படி, கடவுள்களின் அரசியான யூனோ என்ற பெயர் இவ்விண்கலத்திற்கு சூட்டப்பட்டது. இவ்விண்கலம் கேனவரல் முனையில் இருந்து 2011 ஆகத்து 5-ஆம் நாள் ஏவப்பட்டது.[6] யூனோ வியாழக் கோளின் துருவப் பாதையில் 2016 சூலை 5 இல் இணைந்தது.[4][7][8] இதன் திட்டம் நிறைவடைந்தவுடன், யூனோ வியாழனின் வளிமண்டலத்தில் விடப்படும்.யூனோவின் [8]
யூனோ ஓவியரின் கைவண்ணத்தில் | |||||||||||||||||||
திட்ட வகை | வியாழக் கோள்சுற்று | ||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
இயக்குபவர் | நாசா / ஜெ.பி.எல் | ||||||||||||||||||
காஸ்பார் குறியீடு | 2011-040A | ||||||||||||||||||
சாட்காட் இல. | 37773 | ||||||||||||||||||
இணையதளம் |
| ||||||||||||||||||
திட்டக் காலம் | திட்டம்: 7 ஆண்டுகள் முடிந்தது: 12 ஆண்டு-கள், 9 மாதம்-கள், 24 நாள்-கள் கலம்: 4 ஆண்டு-கள், 10 மாதம்-கள், 29 நாள்-கள் அறிவியல் பிரிவு: 4 ஆண்டுகள் (2025 செப்டம்பர் வரை நீடிப்பு) | ||||||||||||||||||
விண்கலத்தின் பண்புகள் | |||||||||||||||||||
தயாரிப்பு | லாக்கீடு மார்ட்டின் | ||||||||||||||||||
ஏவல் திணிவு | 3,625 kg (7,992 lb) [1] | ||||||||||||||||||
உலர் நிறை | 1,593 kg (3,512 lb) [2] | ||||||||||||||||||
பரிமாணங்கள் | 20.1 × 4.6 m (66 × 15 அடி) [2] | ||||||||||||||||||
திறன் | 14 kW பூமியில்,[2] 435 W வியாழனில் [1] 2 × 55-ஆம்பியர்-மணி இலித்தியம்-அயனி மின்கலங்கள்[2] | ||||||||||||||||||
திட்ட ஆரம்பம் | |||||||||||||||||||
ஏவப்பட்ட நாள் | 5 ஆகத்து 2011, 16:25:00 ஒசநே | ||||||||||||||||||
ஏவுகலன் | அட்லசு V 551 (AV-029) | ||||||||||||||||||
ஏவலிடம் | கேப் கேனவரல் | ||||||||||||||||||
ஒப்பந்தக்காரர் | United Launch Alliance | ||||||||||||||||||
புவி-ஐ அணுகல் | |||||||||||||||||||
மிகக்கிட்டவான அணுகல் | 9 அக்டோபர் 2013 | ||||||||||||||||||
தூரம் | 559 km (347 mi) | ||||||||||||||||||
வியாழன் சுற்றுக்கலன் | |||||||||||||||||||
சுற்றுப்பாதையில் இணைதல் | 5 சூலை 2016, 03:53:00 UTC [3] 7 ஆண்டு-கள், 10 மாதம்-கள், 25 நாள்-கள் ago | ||||||||||||||||||
Orbits | 76 (திட்டம்) [4][5] | ||||||||||||||||||
| |||||||||||||||||||
யூனோ திட்ட ஒட்டு
|
யூனோவின் திட்டம் வியாழனின் அமைப்பு, ஈர்ப்புப் புலம், காந்தப் புலம், மற்றும் முனைவுக் காந்தக்கோளம் ஆகியவற்றை அளவிடுதலாகும். அத்துடன், இது வியாழன் எவ்வாறு தோன்றியது, அதற்கு பாறை வடிவ உட்பகுதி உள்ளதா, அதன் வளிமண்டலத்தில் எவ்வளவு நீர் உள்ளது, திணிவுப் பங்கீடு, 620 கிமீ/மணி வரை செல்லும் காற்று போன்றவற்றையும் ஆராயும்.[9]
1995 முதல் 2003 வரை வியாழனைச் சுற்றிவந்த அணுவாற்றலுடன் கூடிய கலிலியோ விண்கலத்திற்குப் பின்னர், வியாழனைச் சுற்றி வந்த இரண்டாவது விண்கலம் யூனோ ஆகும்.[8] வெளிக்கோள்களை நோக்கிச் செலுத்தப்பட்ட ஏனைய விண்கலங்களைப் போலல்லாமல்,[8] யூனோ சூரியவொளித் தகடுகள் மூலம் இயக்கப்படுகிறது. இவ்வொளித் தகடுகள் பொதுவாக பூமியைச் சுற்றிவரும் செயற்கைக்கோள்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன.[10]