![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f8/Ratan_Tata_photo.jpg/640px-Ratan_Tata_photo.jpg&w=640&q=50)
ரத்தன் டாட்டா
From Wikipedia, the free encyclopedia
ரத்தன் நவால் டாட்டா (Ratan Naval Tata) ஒரு இந்திய தொழிலதிபரும் டாட்டா சன்ஸ்ஸின் முன்னாள் தலைவருமாவார். இவர் 1990 முதல் 2012 வரை டாட்டா குழுமத்தின் தலைவராகவும் இருந்தார். அக்டோபர் 2016 முதல் பிப்ரவரி 2017 வரை அதன் இடைக்காலத் தலைவராகவும் பணியாற்றினார். அதன் அறக்கட்டளைக்கு இவர் தொடர்ந்து தலைமை தாங்குகிறார்.[2][3] 2000 ஆம் ஆண்டில் இந்தியக் குடிமகனுக்கான மூன்றாவது மிக உயரிய விருதான பத்ம பூசண் பெற்ற பின்னர் 2008 ஆம் ஆண்டில், இரண்டாவது உயர்ந்த குடிமகன் விருதான பத்ம விபூசண் பெற்றார்.[4]
ரத்தன் நவால் டாட்டா | |
---|---|
![]() | |
பிறப்பு | 28 திசம்பர் 1937 (1937-12-28) (அகவை 86) பம்பாய் |
இருப்பிடம் | கொலாபா, பம்பாய், இந்தியா[1] |
தேசியம் | இந்தியன் |
இனம் | பார்சி |
படித்த கல்வி நிறுவனங்கள் | கோர்னெல் பல்கலைக்கழகம் ஹார்வர்டு பல்கலைக்கழகம் |
பணி | டாடா குழுமத்தின் தலைவர் |
வாழ்க்கைத் துணை | திருமணமாகாதவர் |
விருதுகள் | பத்ம பூசன் (2000) பத்ம விபூஷன் (2008) கேபியீ (2009) |
டாட்டா குழுமத்தின் நிறுவனர் ஜம்சேத்ஜீ டாட்டாவின் மகன் இரத்தன்ஜி டாட்டாவால் தத்தெடுக்கப்பட்ட நேவல் டாட்டாவின் மகனான இவர் கார்னெல் பல்கலைக்கழகக் கல்லூரியில் கட்டமைப்புப் பொறியியலில் இளங்கலை பட்டம் பெற்றார். மேலும் ஆர்வார்டு வணிகப் பள்ளியில் வணிக மேலாண்மை பெற்றார். 1961 இல் டாட்டா குழுமத்தில் சேர்ந்து டாட்டா ஸ்டீல் தளத்தில் பணிபுரிந்தார். ஜெ. ர. தா. டாட்டா 1991 இல் ஓய்வு பெற்றவுடன் டாட்டாவின் இதர நிறுவனங்களான டாட்டா மோட்டார்ஸ் டாட்டா பவர், டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ், டாட்டா தேனீர், டாட்டா கெமிக்கல்ஸ், தி இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி மற்றும் டாட்டா டெலிசர்வீசஸ் ஆகிய பெரும் டாட்டா நிறுவனங்களுக்கும் தலைவரானார். இவரது பதவிக்காலத்தில் டாட்டா குழுமம் டெட்லி, ஜாகுவார் லேண்ட் ரோவர் மற்றும் கோரஸ் நிறுவனங்களை கையகப்படுத்தியது. இது இந்தியாவை மையமாகக் கொண்ட டாட்டாவை உலகளாவிய வணிகமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டது. டாட்டா தனது வருமானத்தில் சுமார் 60-65% தொண்டுக்கு நன்கொடையாக அளித்து, உலகின் மிகப்பெரிய பரோபகாரர்களில் ஒருவராக இருக்கிறார்.