ர. பிரக்ஞானந்தா
From Wikipedia, the free encyclopedia
ரமேசுபாபு பிரக்ஞானந்தா (Rameshbabu "Pragg" Praggnanandhaa; பிறப்பு: 10 ஆகத்து 2005) இந்தியத் தமிழ் சதுரங்க கிராண்ட்மாசுட்டர் ஆவார்.சென்னையில் பிறந்த சதுரங்க வீரரான இவர் அபிமன்யூ மிசுரா, செர்கே கரியாக்கின், குகேஷ், சவாகிர் சிந்தாரொவ் ஆகியோருக்குப் பின்னர் கிராண்ட்மாசுட்டர் பட்டத்தை வென்ற ஐந்தாவது-வயதில் இளையவர் ஆவார்.[1][2] இவர் 2022 பெப்ரவரி 22 இல், தனது 16-வது அகவையில், நடப்பு உலக வாகையாளரான மாக்னசு கார்ல்சனை வென்ற வயதில் குறைந்த சதுரங்க வீரரானார்.[3] 2022 மே 20 இல், மீண்டும் கார்ல்சனை வென்றார்.[4][5] இவருக்கு 2022இல் இந்திய அரசின் அர்ச்சுனா விருது வழங்கப்பட்டது.[6]
விரைவான உண்மைகள் ஆர். பிரக்ஞானந்தா R Praggnanandhaa, முழுப் பெயர் ...
ஆர். பிரக்ஞானந்தா R Praggnanandhaa | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
2023 டாட்டா இசுடீல் சதுரங்க சுற்றுப் போட்டியில் பிரக்ஞானந்தா | |||||||||||
முழுப் பெயர் | ரமேசுபாபு பிரக்ஞானந்தா | ||||||||||
நாடு | இந்தியா | ||||||||||
பிறப்பு | 10 ஆகத்து 2005 (2005-08-10) (அகவை 18) சென்னை, தமிழ்நாடு, இந்தியா | ||||||||||
பட்டம் | கிரான்ட்மாசுடர் (2018) | ||||||||||
பிடே தரவுகோள் | 2612 (திசம்பர் 2021) | ||||||||||
உச்சத் தரவுகோள் | 2743 (சனவரி 2024) | ||||||||||
உச்சத் தரவரிசை | No. 13 (திசம்பர் 2023) | ||||||||||
பதக்கத் தகவல்கள்
|
மூடு