லீ சன் கியூன்
From Wikipedia, the free encyclopedia
லீ சன் கியூன் (ஆங்கில மொழி: Lee Sun-kyun) (பிறப்பு: மார்ச் 2, 1975 - திசம்பர் 27, 2023) என்பவர் ஒரு தென் கொரியா நாட்டு நடிகர் ஆவார். இவர் 2002 ஆம் ஆண்டு முதல் பல சின்னத்திரை தொடர்களிலும் மற்றும் பல திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார். இவர் காபி பிரின்ஸ் (2007), பாஸ்தா (2010), கோல்டன் டைம் (2012), மிஸ் கொரியா (2013), மை மிஸ்டர் (2018), பேய்பாக் (2023) போன்ற பல தொடர்களில் நடித்ததன் மூலம் அறியப்படும் நடிகர் ஆனார்.
லீ சன் கியூன் 이선균 | |
---|---|
பிறப்பு | (1975-03-02)மார்ச்சு 2, 1975 சியோல், தென் கொரியா[1] |
இறப்பு | திசம்பர் 27, 2023(2023-12-27) (அகவை 48) |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2001–2023 |
வாழ்க்கைத் துணை | ஜான் ஹே-ஜின் (m. 2009) |
பிள்ளைகள் | 2 |
கையொப்பம் |
இவர் பாங் சூன்-ஹோவின் அகாதமி விருது வென்ற திரைப்படமான பாரசைட்டு (2019) இல் இவரது பாத்திரத்திற்காக மிகவும் பிரபலமானவர், இதற்காக இவர் தனது நடிகர்களுடன் சேர்ந்து சிகிரீன் ஆக்டர்சு கில்ட் விருதை வென்றார். சர்வதேச எம்மி விருதுக்கான பரிந்துரை உட்பட பல விருதுகளைப் பெற்றார்.[2]
இவர் நடித்த காபி பிரின்ஸ் மற்றும் பாஸ்தா போன்ற தொடர்கள் தமிழ் மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
இவர் திசம்பர் 27, 2023 அன்று, தனது 48 வயதில் கார்பன் மோனாக்சைடு விஷத்தால் இறந்தார். இவர் இறக்கும் போது, போதைப்பொருள் உட்கொண்டதாகக் கூறப்படும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.[3]