லெம்பா பந்தாய்
கோலாலம்பூர், தென் மேற்கு பகுதியில் ஒரு புற நகரம் / From Wikipedia, the free encyclopedia
லெம்பா பந்தாய், (மலாய்: Lembah Pantai; ஆங்கிலம்: Lembah Pantai; சீனம்: 班底谷); என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகரத்தில், தென் மேற்கு பகுதியில் அமைந்து உள்ள ஒரு புற நகரம். இது ஒரு துணை மாவட்டம் மற்றும் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியும் ஆகும்.
விரைவான உண்மைகள் லெம்பா பந்தாய் Lembah Pantai கோலாலம்பூர், நாடு ...
புறநகர் | |
ஆள்கூறுகள்: 3°12′51.2″N 101°38′20.1″E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | கோலாலம்பூர் |
புறநகர் | லெம்பா பந்தாய் |
தொகுதி | கோலாலம்பூர் |
அரசு | |
• நகராண்மை | கோலாலம்பூர் மாநகராட்சி (DBKL) |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 55100 |
தொலைபேசி எண் | +603-207 |
போக்குவரத்துப் பதிவெண் | W ; V |
இணையதளம் | www.dbkl.gov.my |
மூடு
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் மிக முக்கியமான புறநகரப் பகுதியாக விளங்குகிறது. லெம்பா பந்தாய்க்கு அருகில் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகள் செபுத்தே மக்களவைத் தொகுதி, சிகாம்புட் மக்களவைத் தொகுதி, மற்றும் புக்கிட் பிந்தாங் மக்களவைத் தொகுதி ஆகும் 2020-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள் தொகை 148,094.