வடக்கு ஜகார்த்தா
From Wikipedia, the free encyclopedia
வடக்கு ஜகார்த்தா (இந்தோனேசியா: ஜகார்த்தா உத்தாரா) இந்தோனேசியாவின் ஜகார்த்தா சிறப்புத் தலைநகரப் பகுதியை உருவாக்கும் ஐந்து நிர்வாக நகரங்களில் ஒன்றாகும். ஜகார்த்தா சிறப்பு மாவட்டத்தில் வடக்கு ஜகார்த்தாவிலேயே கடலோர பகுதிகள் யாவும் உள்ளடக்கியுள்ளன. வடக்கு ஜகார்த்தாவில், சிலிவாங் ஆற்றின் கரையோரத்தில் ஒரு பகுதி தருமனகாரா பேரரசின் பிரதான துறைமுகமாக இருந்து பின்னர் இது ஜகார்த்தாவாக வளர்ந்தது. பல வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களும் ஜகார்த்தாவின் சிறப்பம்சங்களும் வடக்கு ஜகார்த்தாவில் காணப்படுகின்றன. தஞ்சுங் பிரியோக்கு, வரலாற்றுச் சிறப்புமிக்க சுண்டா கெளாப்பா ஆகிய இரண்டு துறைமுகங்களும் இந்த நகரத்தில் அமைந்துள்ளன. தஞ்சுங் பிரியோக்கு நிர்வாக மையமாக உள்ள வடக்கு ஜகார்த்தாவில் 2010 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 1,645,312 மக்கள் வசிக்கிறார்கள்
வடக்கு ஜகார்த்தா | |
---|---|
நிர்வாக நகரம் | |
வடக்கு ஜகார்த்தா நிர்வாக நகரம் Kota Administrasi Jakarta Utara | |
நாடு | இந்தோனேசியா |
மாகானம் | Jakarta |
அரசு | |
• மேயர் | கெரு புடி ஹர்த்தோனோ |
பரப்பளவு | |
• மொத்தம் | 146.66 km2 (56.63 sq mi) |
மக்கள்தொகை (2010 Census) | |
• மொத்தம் | 16,45,312 |
• அடர்த்தி | 11,000/km2 (29,000/sq mi) |
நேர வலயம் | ஒசநே+7 (WIB) |
இணையதளம் | utara.jakarta.go.id |
வடக்கு ஜகார்த்தா ஜகார்த்தாவின் உண்மையான இயற்கை சதுப்பு நிலங்களில் சிலவற்றைக் கொண்டுள்ளது. நகரம் உருவாக்கப்பட்ட போது இந்த சதுப்பு நிலத்தின் சில பகுதிகள் நகர்ப்புறங்களாக மாற்றப்பட்டன. இருப்பினும், 400 ஹெக்டேர் பரப்பளவில் அலையாத்தி மரக்கன்று நடுவதற்கான ஒரு காடுகள் மறுசீரமைப்பு திட்டம் ஏற்கனவே செயற்படுத்தப்பட்டு 2012 ஆம் ஆண்டில் முடிக்கப்பட்டு உள்ளது. கடற்கரைப் பகுதியில் குறிப்பாக பந்தாய் இண்டா கபுக் பகுதி முழுவதும் கடல் அரிப்பைக் குறைப்பதே இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள் ஆகும். [1]
வடக்கு ஜகார்த்தா வடக்கில் சாவகக் கடல்; கிழக்கே பெக்காசி; தெற்கில் மேற்கு ஜகார்த்தா, மத்திய ஜகார்த்தா, கிழக்கு ஜகார்த்தா என்பன; மேற்கில் தஙராங் என்பவற்றை எல்லைகளாகக் கொண்டுள்ளது.