வளர்ப்புப் புறா
பறவைத் துணையினம் / From Wikipedia, the free encyclopedia
வளர்ப்புப் புறா (ஆங்கிலப் பெயர்: Domestic Pigeon, உயிரியல் பெயர்: Columba livia domestica) மாடப் புறாவிலிருந்து உருவான புறா வகையாகும். மாடப் புறாவே உலகின் பழமையான வளர்ப்புப் பறவையாகும். மெசொப்பொத்தேமியாவின் ஆப்பெழுத்து வரைப்பட்டிகைகளும், எகிப்திய சித்திர எழுத்துகளும் புறாக்கள் கொல்லைப்படுத்தப்பட்டதை 5,000 ஆண்டுகளுக்கு முன்பே குறிப்பிடுகின்றன.[2] ஆய்வுகளின்படி புறாக்களின் கொல்லைப்படுத்தலானது 10,000 ஆண்டுகளுக்கு முன்பே நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.[2]
வளர்ப்புப் புறா | |
---|---|
சிவப்பு செஃபீல்டு வளர்ப்பு ஹோமிங் புறா | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | Columba |
இனம்: | |
துணையினம்: | C. l. domestica |
முச்சொற் பெயரீடு | |
Columba livia domestica கிமெலின், 1789[1] | |
வேறு பெயர்கள் | |
|
புறாக்கள் மனிதனுக்குப் பல நேரங்களில் பயனுள்ளவையாக இருந்துள்ளன, முக்கியமாகப் போர்க் காலங்களில்.[3] இவற்றின் இருப்பிடம் திரும்பும் ஆற்றல் காரணமாக இவை செய்திகளை அனுப்பப் பயன்படுத்தப்பட்டுள்ளன. போர்ப் புறாக்கள் என்று அழைக்கப்படுபவை பல முக்கியமான செய்திகளைக் கொண்டு சேர்த்துள்ளன. இதற்காகப் பல தடவை அங்கீகரிக்கப்பட்டுள்ளன. செர் அமி என்ற புறாவுக்குக் குரோயிக்ஸ் டி குவேரோ, ஜி.ஐ.ஜோ மற்றும் பாடி ஆகிய 32 புறாக்களுக்கு டிக்கின் பதக்கம் எனப் பல பதக்கங்கள் புறாக்களுக்கு மனித உயிர்களைக் காப்பாற்றியதற்காக வழங்கப்பட்டுள்ளது.