விக்கிப்பீடியா:உரிமையில்லா பயன்பாடு காரணவிளக்கம் வழிகாட்டுதல்
From Wikipedia, the free encyclopedia
விக்கிப்பீடியாவில் உரிமையில்லா ஊடகங்களை பயன்படுத்தினால், அந்தப் பயன்பாட்டினை நியாயப்படுத்தும் வகையில், உரிமையில்லா பயன்பாடு காரணவிளக்கம் (சுருங்க பயன்பாடு காரணவிளக்கம்அல்லது நியாயமான பயன்பாடு காரணம்), படிம விவரண பக்கத்தில், விக்கிப்பீடியாவின் உரிமையில்லா உள்ளடக்க வழிமுறைகளுக்கு உட்பட்டு உள்ளதா, என அளிக்கப்பட வேண்டும். இந்த நியாயப்படுத்தல் பயனர்களுக்கு இந்த நியாயமான பயன்பாடு எவ்வித பயன்பாடுகளுக்கு சரியானது என அறிய உதவும். தவிர,விக்கிப்பீடியா பயன்பாட்டிற்குமே இது சரியானது தானா என தீர்மானிக்கவும் உதவும்.
இப்பக்கம் தமிழ் விக்கிபீடியாவில் content guideline தொடர்பான நடைமுறைகளை ஆவணப்படுத்துகிறது. கட்டாயமில்லை எனினும் இங்கு கூறப்பட்டுள்ளவற்றை பின்பற்றுமாறு வேண்டப்படுகிறீர்கள். விதிவிலக்குகள் தோன்றினால் பகுத்தறிவுடன் கூடிய நடைமுறையைப் பின்பற்றுங்கள்! முரண்பாடுகள் தோன்றின் பொது இணக்கத்தை அடையுமுன்னர் மாற்றங்களைச் செய்யாதிருங்கள்! முரண் களைய இதன் பொது பேச்சுப் பக்கத்தைப் பயன்படுத்துங்கள்! |
|
- மேலும் தகவல்களுக்கு: விக்கிப்பீடியா:உரிமையில்லா உள்ளடக்க மீளாய்வு
நீங்கள் உரிமையில்லா படிமங்களையோ அல்லது பிற ஊடகங்களையோ பயன்படுத்தினால், இரு விடயங்களை படிம விவரணப் பக்கத்தில் உள்ளிடுவது தேவையாகும்:
- தகுந்த காப்புரிமை குறிச்சொல் கொண்டு நியாய பயன்பாட்டினை விளக்குதல். பட்டியலுக்குப் பார்க்கவும் விக்கிப்பீடியா:படிம காப்புரிமை குறிச்சொற்கள்/உரிமையற்றவை .
- விவரமான நியாய பயன்பாடு காரணவிளக்கம். ஒவ்வொரு கட்டுரையில் படிமத்தை பயன்படுத்தும்போதும் தனியான, குறிப்பிட்ட காரணவிளக்கத்தை அளிக்க வேண்டும். எந்த கட்டுரையில் இந்த படிமம் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை காரணவிளக்கத்தில் குறிப்பிட வேண்டும்.
உரிமையில்லா உள்ளடக்க வழிகாட்டல்களை படித்த பின்னரே கோப்பை மேலேற்றவும்.விக்கிப்பீடியாவின் கொள்கைகள் ஐக்கிய அமெரிக்காவின் நியாயப் பயன்பாடு சட்டங்களை விட கடுமையானதாகும்.
குறிப்பு: காப்புரிமை குறிச்சொல் மற்றும் நியாய பயன்பாடு காரணவிளக்கம் இரண்டும் இல்லாத உரிமையில்லா படிமங்கள் ஏழு நாட்களுக்குப் பின்னர் நீக்கப்படலாம்.