விஸ்காயா பாலம்
From Wikipedia, the free encyclopedia
விஸ்காயா பாலம் (பாஸ்க் மொழியில் Bizkaiko Zubia, எசுப்பானிய மொழியில் Puente de Vizcaya), என்பது போர்துகலீட் மற்றும் லாஸ் அரீனாஸ் (கேட்சோவின் பகுதி) நகரங்களை இணைக்கும் போக்குவரத்துப் பாலம் ஆகும். இது எசுப்பானியாவின் பிச்கேய் மாகாணத்தில் உள்ளது. இது இபைசாபல் ஆற்றின் வாய்ப்பகுதியின் மேலாக அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் விஸ்காயா பாலம், வகை ...
விஸ்காயா பாலம் | |
---|---|
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர் | |
வகை | கலாச்சார |
ஒப்பளவு | i, ii |
உசாத்துணை | 1217 |
UNESCO region | ஐரோப்பா மற்றும் வட அமேரிக்கா |
பொறிப்பு வரலாறு | |
பொறிப்பு | 2006 (30 ஆவது தொடர்) |
மூடு
இது அமைந்துள்ள பகுதியில் உள்ள மக்கள், மற்றும் உத்தியோகபூர்வ இணையத்தளம் என்பன இப்பாலத்தை பொதுவாக Puente Colgante (எசுப்பானிய மொழியில் தொங்கு பாலத்தை குறிக்கிறது), என்று குறிப்பிட்டாலும் இதன் அமைப்பு தொங்கு பாலத்தை விட சற்று வித்தியாசமானது.