வெண் நூல்கோல்
தாவர துணை இனம் / From Wikipedia, the free encyclopedia
வெண் நூல்கோல் (rutabaga) (வட அமெரிக்க ஆங்கிலம்), சுவீடே (பொதுநலவாய ஆங்கிலம்), நீப்பிசுகாட்டிய மொழி), நூல்கோல் (turnip) அல்லது சுனேகர் (வடபகுதி ஆங்கிலம்) என மேலும் பல்வேறு பகுதிகளில் பல பெயர்களில் வழங்கும் அனைத்தும் வெண் நூல்கோலையே குறிக்கும். இது முட்டைக்கோசு, நூல்கோல் ஆகிய இரண்டின் கலப்பினமாகும். இதன் கிழங்குகள் பலவகைகளில் உண்ணப்படுகின்றன. இலைக்ள் கீரையாக உண்ணப்படுகின்றன. வேர்களும் மேற்பகுதிகளும் கால்நடைட்த் தீவனமாகப் பயன்படுகின்றன.ஈவை மழைக் காலத்தில் நேரடியாகவும் பிற பருவங்களில் வயலில் மேயவிட்டும் தீவனமாகத் தரப்படுகின்றன. அயர்லாந்திலும் இசுகாட்லாந்திலும் ஆலோவீன் பண்டிகைக்குக் கிழங்குகளை விளக்குகளாகச் செதுக்கிப் பயன்படுத்தும் மரபு உள்ளது.
விரைவான உண்மைகள் வெண் நூல்கோல், இனம் ...
வெண் நூல்கோல் | |
---|---|
வெண் நூல்கோல் | |
இனம் | பிராசிக்கா நாபசு |
பயிரிடும்வகைப் பிரிவு | நாபோபிராசிக்கா குழு |
மூடு