வெள்ளைக் கடல்
வடமேற்கு உருசியாவில் உள்ள பேரேண்ட்ஸ் கடலின் தெற்கு கழிமுக கடல் / From Wikipedia, the free encyclopedia
வெள்ளைக் கடல் (ஆங்கில மொழி: White Sea, உருசியம்: Белое море) என்பது உருசியா நாட்டின் வடமேற்குக் கரையிலுள்ளா பேரேண்ட்ஸ் கடலின் தெற்குக் கழிமுகக் கடலாகும். மேற்கே கரேலியாவும், வடக்கே கோலா தீபகற்பமும், வடகிழக்கே கனின் தீபகற்பமும் கொண்டுள்ளது. மொத்த வெள்ளைக் கடலும் ரஷ்ய ஆளுமைக்குட்பட்ட ரஷ்ய நீராகக் கருதப்படுகிறது.[3] நிர்வாகரீதியில் அர்காங்கெல்சுக் மாகாணம், மூர்மன்சுக் மாகாணம் மற்றும் கரேலியா எனப் பிரிந்துள்ளது.
வெள்ளைக் கடல் | |
---|---|
ஆள்கூறுகள் | 65°30′N 37°30′E |
வகை | கடல் |
வடிநில நாடுகள் | உருசியா |
மேற்பரப்பளவு | 90,000 km2 (34,700 sq mi) |
சராசரி ஆழம் | 60 m (197 அடி) |
அதிகபட்ச ஆழம் | 340 m (1,115 அடி) |
மேற்கோள்கள் | [1][2] |
வெள்ளைக் கடலில் உள்ள முக்கியத் துறைமுகம் அர்காங்கெல்சுக்கில் உள்ளது. இக்கடலே ரஷ்ய வரலாற்றில் முக்கியமான சர்வதேச கடல்வணிக தளமாக கொல்மோகோரி பகுதியில் வாழ்ந்த போமோர் பயன்படுத்திவந்தனர். தற்காலத்திலும் சோவியத் ஒன்றியத்தின் முக்கியக் கடற்படை மற்றும் நீர்மூழ்கித் தளமாக உள்ளது. வெள்ளைக் கடல்-பால்டிக் கால்வாய் வெள்ளைக் கடலையும் பால்டிக் கடலையும் இணைக்கிறது. கருங்கடல், செங்கடல் மற்றும் மஞ்சள் கடல் போல நிறத்தின் பெயரில் உள்ள நான்கு கடல்களில் இதுவும் ஒன்றாகும்.