ஹுவா முலான்
சீனத் தொன்மக் கதையில் வரும் பெண் போர்வீரர் / From Wikipedia, the free encyclopedia
ஹுவா முலான் (Hua Mulan, சீன மொழி : 花木蘭) என்பவர் சீன வரலாற்றின் வடக்கு மற்றும் தெற்கு வம்ச காலத்தைச் சேர்ந்த ஒரு புகழ்பெற்ற / கற்பனையான பெண் போர்வீரர் ஆவார். இவர் குறித்து முதலில் பாலட் ஆப் முலானில் ( Chinese ) குறிப்பிடபட்டுள்ளது. பாலாட்டில் குறிப்பிடப்படும், ஹுவா முலான், ஒரு ஆணாக வேடமிட்டு, தனது வயதான தந்தைக்கு பதிலாக இராணுவத்தில் இணைகிறாள். பன்னிரண்டு ஆண்டுகள் படையில் போர்புரிந்து உயர் தகுதியைப் பெற்றார், ஆனால் அவள் தனக்கு வரும் வெகுமதியையும் மறுத்துவிட்டு தனது சொந்த ஊருக்கு வந்து ஓய்வு கொள்கிறாள்.
ஹுவா முலான்(மரபுவழிச் சீனம்: 花木蘭) | |
---|---|
கேதரிங் ஜெம்ஸ் ஆஃப் பியூட்டி ஆல்பத்தில் சித்தரிக்கப்பட்டுள்ள முலான் (畫麗珠萃秀) | |
உருவாக்கியவர் | குவோ மாவாகியன் |
தகவல் | |
பால் | பெண் |
தொழில் | காலாட்படை வீரர் |
தேசிய இனம் | சியான்பே அல்லது சீனம் (முடிவானது அல்ல) |
பாலட் ஆப் ஹுவா முலான் வரலாற்றானது வடக்கு லீ பேரரசு காலத்தில் அமைந்ததாக உள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு, மிங் வம்சத்தைச் சேர்ந்த சூ வெய் நாடகம் அவளை வடக்கு லீ பேரரசு காலத்தவளாக சித்தரிக்கிறது.[1]
வெள்ளி கோளில் உள்ள ஹுவா முலான் பள்ளம் என்ற பெயரானது இவளது பெயரில் இடப்பட்டது.[2][3]