2012 நிகழ்வு (2012 phenonenon) உலகின் பேரழிவு அல்லது பெரும் மாற்றம் 2012ஆம் ஆண்டில் நிகழலாம் என நிலவும் நம்பிக்கைகளையும் கருத்துக்களையும் குறிக்கிறது.[1][2] இந்த சோதிடங்கள் முதன்மையாக மாயா நாட்காட்டியில் 5,125 ஆண்டுகள் கழித்து திசம்பர் 21 அல்லது 23,2012ஆம் ஆண்டில் முடிவதைக் கொண்டு எழுந்துள்ளன.மெக்சிகோ பகுதியில் வாழ்ந்திருந்த மாயா நாகரீகத்தில் உலகம் துவங்கியதாக அவர்கள் கருதிய நாளிலிருந்து தொடர்ந்த நாட்காட்டி முறை (Long Count calendar) கடைபிடிக்கப்பட்டது. இதனைக் கொண்டு தொன்மவியல் வானிலையாளர்கள்,மத பொழிப்புரையாளர்கள், எண்கணிதவியலாளர்கள் மற்றும் புறப்புவி ஆய்வாளர்கள் என ஒவ்வொருவரும் ஒரு நம்பிக்கை அல்லது கருத்தை பரப்பி வருகின்றனர்.

Thumb
மாயா நாட்காட்டியில் ஓர் நாளின் கல்வெட்டு

புதிய காலம் விரிவுரையாளர்கள் பேரழிவு ஏற்படும் என்பதை மறுத்து அந்த நாளில் நேர்மறையான மாற்றம் நிகழலாம் எனவும் 2012 புதிய சகாப்தத்தின் துவக்கம் என்றும் கொள்கை வகுக்கின்றனர்.[3] இத்தகைய எண்ணங்களும் கருத்துக்களும் பல புத்தகங்கள்,தொலைக்காட்சி விவரணப்படங்கள்,இணைய தளங்கள் மூலம் உலகெங்கும் பரவியுள்ளது.

மாயா ஆராய்ச்சியாளர்கள் மாயா நாட்காட்டி 2012இல் முடிகிறது என்பது மாயா வரலாற்றை தவறாக கணிக்கிறது என்று வாதிக்கிறார்கள்.[2][4] இன்றைய மாயாவினருக்கு, 2012 முற்றிலும் தொடர்பில்லாதது, பழைமைவாதிகளுக்கு இதனைக் குறித்த மூல செய்திகளோ கிடைப்பதில்லை அல்லது முரண்பட்டுள்ளது.இதனால் அவர்களிடையே இந்த நாளைக்குறித்த ஓர் பரவலான இணக்கமான புரிதல் இல்லை.[5] 2012ஆம் ஆண்டு உலகின் பேரழிவுக்கான காரணங்களாக பகுதி அறிவியலாளர்கள் கூற்றுக்களை (கருங்குழி ஒருங்கிணைப்பு,தடுமாறும் கிரகமொன்று புவி மீது மோதல்,துருவங்கள் மாற்றங்கள்,சூரியனின் தீப்பிழம்புகள்) அறிவியல் வல்லுனர்கள் மறுத்துள்ளனர்.பெரும்பாலானவை அடிப்படை இயல்பியல் விதிகளுக்குப் புறம்பானவை.[6]

இந்த ஆண்டு பேரழிவு நிகழுமென அச்சமடைந்துள்ள பொதுமக்களின் நம்பிக்கையின் பேரில் ரோலாண்டு எம்மெரிக் இயக்கத்தில் 2012(திரைப்படம்) வெளியாகியுள்ளது.மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஊட்டுவதாக இல்லாத மனிதம் தொடர்ச்சி கழகம் மூலம் இந்நிறுவனத்தால் வெளியிடப்பட்ட விளம்பர நிகழ்படம் அறிவியலாளர்களாலும் பகுத்தறிவாளர்களாலும் பெரிதும் விமரிசிக்கப் பட்டது.

மேற்கோள்கள்

உசாத்துணைகள்

மேலும் படிக்க

புற இணைப்புகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.