432 பார்க் அவென்யூ
From Wikipedia, the free encyclopedia
432 பார்க் அவென்யூ (432 Park Avenue) என்பது நியூயார்க் நகரின் மன்னாவ்டன் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்புப் பகுதியாகும். 104 கூட்டுரிமை வீடுகளை உள்ளடக்கியதாக சி.ஐ.எம். குழுமம் இந்த உயர்ந்த அடுக்குமாடி குடியிருப்பைக் கட்டியுள்ளது. 2011 ஆம் ஆண்டில் முதலில் 1300 அடிகள் (396 மீட்டர்) உயரம் கொண்ட கட்டிடமாகக் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டது[3][4] . கட்டிட வேலைகள் 2012 இல் துவங்கப்பட்டன. 2015[5] ஆம் ஆண்டில் இவ்வுயர்ந்த கட்டிடம் கட்டிமுடிக்கப்படல் வேண்டுமென்று திட்டமும் தீட்டப்பட்டு செயல்பாடு தொடங்கியது. இதற்காக 1926 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட 495 அறைகள் கொண்ட டிராக் உணவுவிடுதி இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டில்தான் இவ்வுணவு விடுதி ஆரி மேக்லோவ் என்பவருக்கு 440 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது என்பதும் குறிப்பிடத்தகுந்தது. வாங்கப்பட்ட ஒரு வருடத்திலேயே அக்கட்டிடம் இடிக்கப்பட்டது [6] என்பது ஒருபுறமிருந்தாலும் நியூயார்க் நகரின் மையப்பகுதியில் கிழக்கு 56 மற்றும் 57 ஆவது தெருக்களின் மத்தியில் அமைந்திருந்த காரணத்தால் அவ்விடத்தின் மதிப்பு மிகவும் உயர்ந்தது.
432 பார்க் அவென்யூ Park Avenue | |
---|---|
இராக்பெல்லர் மையத்தில் இருந்து பார்வையிட்டது. (யூலை 2015) | |
![]() | |
பொதுவான தகவல்கள் | |
நிலைமை | மிக உயர்ந்த கட்டிடமாக அறிவிக்கப்பட்டது |
வகை | குடியிருப்புப் பகுதி |
இடம் | 432 பார்க் அவென்யூ மன்னாவ்டன், நியூயார்க் நகரம் |
கட்டுமான ஆரம்பம் |
|
மதிப்பிடப்பட்ட நிறைவு | 2015 |
திறப்பு |
|
செலவு | US$ 1.25 பில்லியன்[1] |
உயரம் | |
கூரை | 425.5 m (1,396 அடி) |
மேல் தளம் | 392.1 m (1,286 அடி) (occupied) |
தொழில்நுட்ப விபரங்கள் | |
தள எண்ணிக்கை | 88 + 3 தரைத்தளத்திற்கு கீழே [2] |
தளப்பரப்பு | 412637 சதுர அடி |
உயர்த்திகள் | 6 |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக்கலைஞர்(கள்) | ரஃபேல் வினோலி[3] மற்றும் எஸ்.எல்.சி.இ.கட்டிடக் கலைஞர், எல்.எல்.பி |
மேம்பாட்டாளர் | சி.ஐ.எம் குழுமம் / மேக்லோவ் உடைமைகள் |
அமைப்புப் பொறியாளர் | டபிள்யூ.எஸ்.பி கேண்டர் சீனக்கு |
முதன்மை ஒப்பந்தகாரர் | இலெண்ட் லீசு |
உயரத்தின் அடிப்படையில், 1396 அடிகள் (425.5 மீட்டர்)[7] என்பது அமெரிக்காவில் உள்ள மிகவுயர்ந்த கட்டிடங்களின் வரிசையில் பார்க் அவென்யூ மூன்றாவது உயர்ந்த கட்டிடமாகவும் குடியிருப்புப் பகுதி என்ற அடிப்படையில் உலகத்திலேயே மிகவுயர்ந்த கட்டிடம் என்றும் மதிக்கப்படுகிறது[8]. நியூயார்க் நகரைப் பொறுத்தவரை உலக வர்த்தக மையக் கட்டிடத்திற்கு அடுத்ததாகவும் எம்பயர் ஸ்டேட்டு கட்டிடத்தை விட உயர்ந்ததாகவும் விளங்குகிறது. உயரம் கணக்கிடும்பொழுது உச்சிக் கூரையையும் கணக்கில் எடுத்துக்கொண்டால், 432 பார்க் அவென்யூ கட்டிடந்தான் நியூயார்க் நகரின் மிகவுயர்ந்த கட்டிடம் என்ற பெருமையைப் பெருகிறது. ஏனெனில் உலக வர்த்தக மையக் கட்டிடத்தை விட இதன் கூரை 28 அடிகள் அல்லது 8.5 மீட்டர் அளவு உயர்ந்து காணப்படுகிறது[9].