அகச்சிவப்பு வானவியல் செயற்கைக்கோள்

From Wikipedia, the free encyclopedia

அகச்சிவப்பு வானவியல் செயற்கைக்கோள்
Remove ads

அகச்சிவப்பு வானவியல் செயற்கைக்கோள் ( Infrared Astronomical Satellite) என்பது முதன்முதலில் விண்வெளி அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு விண்வெளி ஆய்வு மையமாகும். ஆங்கிலத்தில் இதைச் சுருக்கமாக IRAS என்றும் தமிழில் சுருக்கமாக அ.சி.வா.செ என்றும் அழைப்பர். முழுவானத்தையும் அகச்சிவப்பு அலைநீளங்களில் ஆய்வு மேற்கொள்ள இச்செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டது[3].

விரைவான உண்மைகள் அகச்சிவப்பு வானவியல் செயற்கைக்கோள் Infrared Astronomical Satellite (IRAS)(அ,சி.வா.செ), பொதுத் தகவல்கள் ...

1983 ஆம் ஆண்டு சனவரி 25 இல்[1] இத்திட்டம் தொடங்கப்பட்டது. இச்செயற்கைக்கோளின் பணி 10 மாதங்களுக்கு நீடித்தது. இதன் தொலைநோக்கியை அமெரிக்கா, நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகள் இணைந்து உருவாக்கியிருந்தன. 12, 25, 60 மற்றும் 100 மைக்ரோ மீட்டர் அலை நீளங்களில் 250000 க்கும் மேற்பட்ட அகச்சிவப்பு மூலங்கள் காணப்பட்டன

கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்திலுள்ள அகச்சிவப்பு செயலாக்க மற்றும் ஆய்வுமையம் அகச்சிவப்பு வானவியல் செயற்கைக் கோளிடமிருந்து பெறப்படும் தரவுகளை ஆய்வுசெய்து உதவியது. தற்பொழுது, அகச்சிவப்பு செயலாக்க மற்றும் ஆய்வுமையத்தின் அகச்சிவப்பு அறிவியல் காப்பகம் இந்த அகச்சிவப்பு வானவியல் செயற்கைக்கோள் காப்பகத்தைக் கொண்டுள்ளது.[4][5]

Remove ads

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads