அகமதியா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அகமதியா (Ahmadiyya) என்பது 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியில் பிரித்தானிய இந்தியாவில் தோற்றம் பெற்ற ஓர் இசுலாமிய சீர்திருத்த இயக்கம் ஆகும்.[1] பஞ்சாப் மாகாணத்தில் வாழ்ந்த மிர்சா குலாம் அகமது (1835-1908) இந்த இயக்கத்தின் முன்னோடி ஆவார். முகம்மது நபிக்குப் பிறகு வந்த இறைத்தூதராகத் தன்னை இவர் அறிவித்தார். மிர்சாவை இறைத்தூதர் என நம்புவதன் மூலம் முகம்மது நபியே இறுதி இறைத்தூதர் என்ற பெரும்பான்மை முஸ்லிம்களின் நம்பிக்கையிலிருந்து அகமதியர்கள் மாறுபடுகின்றனர். இதனால் பல இஸ்லாமிய நாடுகளில் அகமதியர்கள் முஸ்லிம்களாக ஏற்று கொள்ளப்படுவதில்லை.[2] இந்தியா அரசு இவர்கள் முஸ்லிம்களாகவே கருதிகிறது.[3] அகமதியா இயக்கம் 200 நாடுகளில் பரவியிருக்கிறது. உலகில் உள்ள 106 கோடி முஸ்லிம்களில் அகமதியர்கள் எண்ணிக்கை 1.25% ஆக உள்ளனர்.


Remove ads
பாகிஸ்தான்
உலகில் அதிக அளவிலான அகம்மதியர்கள் வாழும் நாடு பாகிஸ்தான். ஏறத்தாழ இரண்டு முதல் ஐந்து மில்லியன் அகம்மதியர்கள் வாழ்கின்ற போதிலும் அந்நாடு அவர்களை இசுலாமியர் என ஏற்றுக்கொள்வதில்லை.[4][5][6][7] அவர்களின் பள்ளிவாசல்களை மசூதிகள் என ஏற்றுக் கொள்வதில்லை. அகம்மதியர்களை இசுலாமியர் அல்லாதோர் எனக் குறிக்க அந்நாட்டு அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டது.[8] நோபெல் பரிசு பெற்ற இயற்பியலாளர் அப்துஸ் சலாம் அகமதியர் என்பதால் அவரது கல்லறையில் இருந்து முஸ்லீம் என்ற வார்த்தை நீக்கப்பட்டது.[9] பாக்கித்தானில் உள்ள அகமதியர்கள் நன்கு படித்தவர்கள். சட்டம், பொறியியல், மருத்துவம், கட்டிடக்கலை என்று எல்லா துறைகளிலும் வல்லவர்களாக உள்ளனர். பாக்கித்தானின் பொருளாதாரத்துக்கு இவர்களின் பங்கு குறிப்பிடத்தக்கதாக உள்ளது. ஒட்டுமொத்த பாகிஸ்தானில் எழுத்தறிவு பெற்றவர்கள் 30% அதேசமயம் அகமதியர்கள் 100% எழுத்தறிவு கொண்டவர்களாக உள்ளனர்.[10] 28.05.2010 அன்று லாகூரில் உள்ள அகம்மதியர்களின் தொழுகையிடத்தில் ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் 95 பேர் மரணமடைந்தனர்; நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.[11]
Remove ads
பங்களாதேசம்
வங்காள தேசத்திலும் அகமதியர்கள் முஸ்லீம்களாக கருதப்படுவதில்லை. அகமதியா இயக்கத்தினரின் ஊடக வெளியீடுகள் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளன.[12] அகமதியர்கள் இறைமறுப்பாளர்களாகவே கருதப்படுகின்றனர்.[13]
இந்தியா
இந்தியாவில் அகமதிய இயக்கத்தினர் இந்தியச் சட்டத்தின் அடிப்படையில் முஸ்லீம்களாகவே கருதப்படுகின்றனர். கேரள உயர்நீதிமன்றத் தீர்ப்பு ஒன்றும் அகமதியரை முஸ்லீம் என உறுதி செய்துள்ளது.[14] அகமதியர்களின் வழிபாட்டு உரிமைக்கு எந்தவிதத் தடையும் இந்தியாவில் இல்லை.[3]
ஆசாத், ஜம்மு காஸ்மீர் கவுன்சில் இவர்களை முஸ்லிம்கள் என ஏற்க முடியாது என அறிவித்துள்ளது.[2]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads