அக்கினேனி நாகார்ஜுனா

இந்திய திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் From Wikipedia, the free encyclopedia

அக்கினேனி நாகார்ஜுனா
Remove ads

அக்கினேனி நாகார்ஜூனா (தெலுங்கு: ఆక్కినేని నాగార్జున, பிறப்பு: ஆகத்து 29, 1959) ஓர் இந்தியத் திரைப்பட நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் ஆந்திரத் திரைப்படத்துறையில் முதன்மையாக பணிபுரிகிறார், ஒரு சில பாலிவுட் மற்றும் தமிழ் படங்களிலும் பணியாற்றியிருக்கிறார்.

விரைவான உண்மைகள் அக்கினேனி நாகார்ஜுனா ராவ், இயற் பெயர் ...
Remove ads

ஆரம்ப கால வாழ்க்கை மற்றும் குடும்பம்

நாகார்ஜூனா 1959 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 29 ஆம் தேதி சென்னையில் பிறந்தார். இவர் தெலுங்கு நடிகர் அக்கினேனி நாகேசுவர ராவ் மற்றும் அன்னபூர்ணா அக்கினேனியின் மகனாவார். அவர்களின் ஐந்து குழந்தைகளில் நாகார்ஜூனா கடைசியாவார். பின்னர் அவரது குடும்பம் ஐதராபாதத்திற்கு குடிபெயர்ந்தது அங்கு தனது ஆரம்ப கால கல்வியை ஐதராபாத் பொதுப்பள்ளியிலும் பின்னர் பள்ளி இடைநிலைக் கல்வியை லிட்டில் பிளவர் இளநிலைக்கல்லூரியிலும் கற்றார்.

நாகார்ஜூனா இருமுறை திருமணம் செய்துள்ளார். அவரது முதல் மனைவி, லஷ்மி ராமா நாயுடுவை 1984 ஆம் ஆண்டு பிப்ரவரி 18ம் தேதி மணந்தார். அவர் தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளர் டி. ராமா நாயுடுவின் மகளும் தெலுங்கு திரை நட்சத்திரம் வெங்கடேசின் சகோதரியுமாவார். நாகார்ஜூனா லஷ்மியினரின் மகன் நாக சைத்தன்யா (1986 ஆம் ஆண்டு நவம்பர் 23ம் தேதி பிறந்த இடம் - ஹைதராபாத்) ஜோஷ் திரைப்படத்தின் மூலம் நடிக்கத் துவங்கினார், அது 2009 ஆம் ஆண்டில் செப்டம்பர் 5 ஆம் திகதி வெளிவந்தது.

பின்னர் நாகார்ஜூனா தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்பட நடிகை அமலாவை மணந்தார். அமலா இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில், ஐரிஷ் தாய் மற்றும் பெங்காலி தந்தை ஆகியோருக்கு பிறந்தார். அவரது இயற்பெயர் அமலா முகர்ஜியாகும். நடிப்பிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, அவர் இந்தியாவின் முன்னணி விலங்குகள் நல ஆர்வலராக உள்ளார். இருவரும் 1992 ஆம் ஆண்டில் ஜூன் 11ம் தேதி திருமணம் செய்தனர். மேலும், அவர்கட்கு அகில் எனும் பெயர் கொண்ட ஒரு மகன் உள்ளான் (1994 ஆம் ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி - பிறந்த இடம் சான் ஜோஸ், அமெரிக்க ஒன்றியம்). அகில், சிசிந்திரி எனும் படத்தில் தவழும் குழந்தையாக நடித்தார்.

Remove ads

விருதுகள்

தேசிய சினிமா விருதுகள்

வெற்றி பெற்றது

  • 1998 - தேசிய திரைப்பட விருது சிறப்பு நடுவர் அன்னமய்யா

நந்தி விருது

வெற்றி பெற்றது

  • 1997 - சிறந்த நடிகர் அன்னமய்யா
  • 1999 - கம்ஸ்யா (வெண்கலம்) நந்தி விருது பிரேம் கதா தயாரிப்பு
  • 2002 - சிறந்த நடிகர் சந்தோஷம்
  • 2002 - சுவர்ணா (தங்கம்) நந்தி விருது மன்மதூதூ தயாரிப்பு
  • 2006 - சிறந்த நடிகர் ஸ்ரீ ராமதாஸு

பிலிம்பேர் விருதுகள்

  • 1990 - பிலிம்பேர் சிறந்த நடிகர் விருது (தெலுங்கு) சிவா
  • 1997 - பிலிம்பேர் சிறந்த நடிகர் விருது தெலுங்கு அன்னமய்யா

மேற்குறிப்புகள்

புற இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads