அகியட் வம்சம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

அகியட் வம்சம் என்பது பண்டைய கிரேக்கத்தின் சக்திவாய்ந்த நகர அரசான எசுபார்த்தாவின் இரண்டு அரச குடும்பங்களில் ஒன்றாகும். அகியாட் வம்சமானது எசுபார்த்தாவின் மற்றொரு அரச வம்சமான யூரிபோன்டிட்களுக்கு மூத்தவர்கள். இவர்களுக்கு இடையில் நீடித்த போட்டாபோட்டி இருந்தது. இந்த வம்சத்தின் அனுமான நிறுவனர் முதலாம் அகிஸ் ஆவார். இவர் கிமு 10 ஆம் நூற்றாண்டின் இறுதியில் எசுபார்த்தாவின் முதல் மன்னராக இருக்கலாம். அவரது பெயராலேயே இந்த வம்சத்தின் பெயர் அமைந்தது. கிமு 215 இல் எசுபார்த்தாவின் இன்னொரு மன்னரான யூரிபோன்டிட் லைகர்கசால் பதவி நீக்கம் செய்யப்பட்ட மூன்றாம் ஏஜிபோலிஸ்தான் கடைசி அகியாட் வம்ச மன்னர் ஆவார். இந்த வம்சத்தின் மிகவும் பிரபலமான மன்னர் முதலாம் லியோனிடாசு, கிமு 480 இல் தெர்மோபைலேச் சமரில் வீர மரணம் அடைந்ததற்காக அறியப்பட்டவர்.

Remove ads

வரலாறு

எசுபார்த்தாவின் இரட்டை மன்னர்களின் தனித்தன்மையை விளக்குவதற்காக ஒரு தொன்மக் கதை நிலவுகிறது. அது, எசுபார்த்தாவின் முதல் மன்னரான அரிஸ்டோடெமோசுக்கு யூரிஸ்தீனஸ் மற்றும் பிரோக்ல்ஸ் என்ற இரட்டையர்கள் பிள்ளைகளாக இருந்ததார்கள். இந்த இருவரில் முதலில் பிறந்தவர் யார் என்று எசுபார்த்தன்களுக்குத் தெரியாததால், அவர்கள் இருவரையும் ஒரே அதிகாரம் கொண்ட இரட்டை ஆட்சியாளர்களாகத் தேர்ந்தெடுத்தனர். இதில் யூரிஸ்தீனஸ் அகியாட் வம்சத்தின் முதல் நபரும், பிரோக்ல்ஸ் யூரிபோன்டிட் வம்சத்தின் முதல் நபரும் ஆவார். [1]

நவீன வரலாற்று அறிஞர்கள் இந்த தொன்ம இரட்டையர் கதைக்கு மாறாக முதலாம் அகிஸ் மற்றும் யூரிபோன் ஆகியோரை தனித்தனி வம்சங்களின் நிறுவனர்களாக கருதுகின்றனர். ஏனெனில் அவர்களின் பெயராலேயே அவர்களின் சந்ததியினர் அழைக்கப்படுகின்றனர். [2] [3] இருவம்சங்களும் எலனியக் காலம் வரை தொடர்புடையதாக இல்லை. மேலும் யூரிபோன்டிட்கள் அசியாட்களை விட மிகவும் தாமதமாக அரச நிலையை அடைந்தனர். இதன் விளைவாக, இரண்டு அரச மரபுகளை சமன்படுத்தும் நோக்கில், யூரிபோன்டிட் அரசர்களின் பட்டியலில் பல பெயர்கள் இடையில் செருகப்பட்டன. [4] ஆக, கிமு 10 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இருந்து அசியாட்கள் ஆட்சி செய்திருக்கக் கூடும், யூரிபோன்டிட்கள் கிமு 8 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மட்டுமே அரசாட்சியைப் பெற்றனர் எனகருத்தபடுகிறது.

எசுபார்த்தா நகர அரசாக உருவாக்கியதன் விளைவாக, கிமு 8 ஆம் நூற்றாண்டில் ஆர்கெலாஸ் (அகியாட்) மற்றும் சாரிலோஸ் ( யூரிபோன்டிட்) ஆகிய அரசர்களின் கீழ் இரண்டு வம்சங்களும் கூட்டாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கலாம். [5] எசுபார்த்தா நகரம் ஐந்து கிராமங்களைக் கொண்டு உருவானது ( பிடானா, மெசோவா, லிம்னாய், கினோசௌரா, அமிக்லாய் ) இதில் பிந்தைய கிராமம் தாமதமாக மற்ற நான்குடன் இணைந்தது. அசியாட்சின் கல்லறை பிடானாவில் அமைந்திருந்தது, யூரிபோன்டிட்கள் லிம்னாயில் இருந்தனர், இது நான்கு கிராமங்கள் இணைந்தபோது இரட்டை முடியாட்சி உருவாக்கப்பட்டது என்று கூறுகின்றனர். [6]

Remove ads

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads