அகில இந்திய ஆரோக்கியம் மற்றும் பொதுச் சுகாதாரம் நிறுவனம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அகில இந்திய ஆரோக்கியம் மற்றும் பொதுச் சுகாதாரம் நிறுவனம் (All India Institute of Hygiene and Public Health), கொல்கத்தாவில் அமைந்துள்ள பொதுச் சுகாதாரம் மற்றும் தொடர்புடைய அறிவியல் ஆராய்ச்சி பயிற்சிக்கான முன்னோடி நிறுவனம் ஆகும். இது 30 டிசம்பர் 1932இல் ராக்பெல்லர் அறக்கட்டளையின் உதவியுடன் நிறுவப்பட்டது. இது புது தில்லி இந்திய அரசு சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்சுகாதார சேவைகள் இயக்குநர் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறது. மேற்கு வங்க சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இது 2003இல் நிறுவப்பட்டது. சிங்கூரில் கிராமப்புற பயிற்சி மையம் மற்றும் செட்லாவில் நகர்ப்புற பயிற்சி மையமும் உள்ளது.[1][2]
1943இல் இந்நிறுவனம் ராக்பெல்லர் அறக்கட்டளையுடன் இணைந்து துளை துரப்பணத்துளை கழிவறையினை உருவாக்கியது.[3][4]
Remove ads
வரலாறு
ராக்பெல்லர் அறக்கட்டளையின் உதவியுடன் நிறுவப்பட்ட இந்த பொதுச் சுகாதார நிறுவனத்தினை 30 டிசம்பர் 1932இல் வங்காள ஆளுநர் சர் ஜான் ஆண்டர்சன் தொடங்கிவைத்தார்.[5] கல்கத்தா பல்கலைக்கழகத்தின் இணைவுக் கல்லூரியாகச் செயல்பட்டது. இந்த கல்லூரி தொடங்கப்பட்டதிலிருந்து, கல்கத்தா வெப்பமண்டல மருத்துவ நிறுவனத்தின் ஆசிரியர்களுடன் இணைந்து செயல்படுகிறது. 1953ஆம் ஆண்டில், இந்த நிறுவனம் உலகச் சுகாதார நிறுவனம் மற்றும் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதிய பன்னாட்டுப் பயிற்சி மையமாக அங்கீகாரம் பெற்றது. இந்த நிறுவனம் 1944-1945இல் இந்தியாவில் முதல் கிராம சுகாதார கணக்கெடுப்பை மேற்கொண்டது. இதில் மேற்கு வங்கத்தில் 7000 உறுப்பினர்களைக் கொண்ட கிட்டத்தட்ட 1200 குடும்பங்களின் பொதுச் சுகாதார ஆய்வு செய்யப்பட்டது.[6] சுதந்திரத்திற்குப் பிறகு, 1950 இல் விரிவாக்கத் திட்டங்கள் வரையப்பட்டன. சுமார் 90 இலட்சம் செலவில், நிறுவனத்தில் குழந்தை மற்றும் மகப்பேறு சுகாதாரப் பிரிவை உருவாக்கப்பட்ட செலவினை மத்திய சுகாதார அமைச்சகம் மற்றும் ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகள் அவசர நிதியம் சமமாகப் பகிரப்பட்டது.[7]
1995 ஆம் ஆண்டில், தர்பார் மகிளா சமன்வயா குழுவின் அகில இந்தியச் சுகாதாரம் மற்றும் பொது நலம் நிறுவன பொதுச் சுகாதார விஞ்ஞானி மருத்துவர் சுமாராஜித் ஜனா 65000 பாலியல் பணியாளர்களிடம் எய்ட்ஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.[8] 2004ஆம் ஆண்டில், அகில இந்தியச் சுகாதாரம் மற்றும் பொது நலம் நிறுவனம் புதிதாக உருவாக்கப்பட்ட மேற்கு வங்க சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது.
Remove ads
துறைகள்
- உயிர் வேதியியல் மற்றும் ஊட்டச்சத்து
- தொற்றுநோய்
- சுகாதார கல்வி
- தாய் மற்றும் குழந்தை ஆரோக்கியம்
- நுண்ணுயிரியல்
- தொழில்சார் சுகாதாரம்
- பொதுச் சுகாதார நிர்வாகம்
- பொதுச் சுகாதார செவிலியம்
- சுற்றுச்சூழல் சுகாதாரம் மற்றும் சுகாதார பொறியியல்
- தடுப்பு மற்றும் சமூக மருத்துவம்
- புள்ளியியல்
- நடத்தை அறிவியல்
பொதுச் சுகாதார மேலாண்மையில் முதுகலை பட்டயப்படிப்பை வழங்கும் இந்தியாவில் உள்ள ஒன்பது நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகும்.[9] இதனுடைய முதன்மை வளாகம் சித்தரஞ்சன் வளாகத்தில் உள்ளது. 2011 இல் கொல்கத்தாவின் உப்பு ஏரி நகரில் இதன் இரண்டாவது வளாகமும் செயல்படத் தொடங்கியது.
Remove ads
குறிப்பிடத்தக்க ஆசிரியர்கள்
- சிதம்பர சந்திரசேகரன்[சான்று தேவை][ மேற்கோள் தேவை ]
இதையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads