அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு

இந்திய அரசியல் கட்சி From Wikipedia, the free encyclopedia

அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
Remove ads

அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு (Bengali: সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস) ஓர் இந்திய அரசியல் கட்சியாகும். தொடக்கத்தில் இது முன்பு மேற்கு வங்காள திரிணாமுல் காங்கிரசு என அழைக்கப்பட்டது. 1997 ல் தொடங்கப்பட்ட இதன் தலைவராக மம்தா பானர்ஜி உள்ளார்.

விரைவான உண்மைகள் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, தலைவர் ...

இந்திய தேசிய காங்கிரசிலிருந்து டிசம்பர் 22, 1997 ல் மம்தா பானர்சி நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் திரிணாமுல் காங்கிரசைத் தொடங்கினார். டிசம்பர் 1997 ல் இக்கட்சி இந்திய தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்யப்பட்டது. தேர்தல் ஆணையம் இக்கட்சிக்கு தனி சின்னத்தை (பூ) ஒதுக்கியது. இச்சின்னத்தை மம்தா பானர்சியே வடிவமைத்தார்.

இந்திய தேசிய காங்கிரசுடன் திரிணாமுல் காங்கிரசு நெருக்கமடைவதை அடுத்து மம்தா பானர்சியுடன் கருத்து வேறுபாடு கொண்டு சுபர்ட்டா முகர்சி 2005ல் விலகிச் சென்றார். அப்போது அவர் கொல்கத்தா மாநகராட்சியின் மேயராக இருந்தார். 59 சட்டமன்ற உறுப்பினர்களில் 10 பேரும், 55 கவுன்சிலர்களில் 11 பேரும் இவரை ஆதரித்ததாகக் கூறினார்.[2]

2004-ல் தேசியவாத காங்கிரசு கட்சியிலிருந்து விலகிய பி. ஏ. சங்மா தன் ஆதரவாளர்களுடன் திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார்.

Remove ads

மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல் (2011)

2011 ஏப்ரல்/மே மாதங்களில் ஆறு கட்டங்களாக நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் மாபெரும் வெற்றி பெற்று 34 ஆண்டுகள் தொடர்ந்து ஆண்டுவந்த இடதுசாரி முன்னணி அரசினை வீழ்த்தியது. திரிணாமுல் காங்கிரசு 294 இடங்கள் உள்ள சட்டப்பேரவையில் 184 இடங்களைக் கைப்பற்றி உள்ளது. கூட்டணிக் கட்சியான காங்கிரசுடன் இணைந்து 227 இடங்களைப் பிடித்தது. 20 மே 2011 அன்று மம்தா பானர்ஜி மேற்குவங்க முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.

மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல் (2016)

2016 ஏப்ரல்/மே மாதங்களில் ஆறு கட்டங்களாக நடந்த சட்டப்பேரவைத் தேர்தல்களில் திரிணாமுல் காங்கிரசு கட்சி 211 தொகுதிகளில் வென்று பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைக்கிறது. தொடர்ந்து இரண்டாவது முறையாக மம்தா பானர்ஜி மேற்குவங்க முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.[3][4]

Remove ads

மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல் (2021)

2021 மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தலில் இக்கட்சி 47.94% வாக்குகள் பெற்று 213 சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சி மூன்றாம் முறையாக ஆட்சி அமைத்தது.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் (2019)

2019 நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் இக்கட்சி 22 மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெற்றது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads