அங்கிடி செட்டியார்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அங்கிடி வீரைய செட்டியார் (Angidi Verriah Chettiar ) (29 ஏப்ரல் 1928 - 15 செப்டம்பர் 2010) மொரிசியசின் அரசியல்வாதியான இவர், தான் செப்டம்பர் 2010 இல் இறக்கும் வரை மொரிசியசின் துணை குடியரசு தலைவராக இரண்டு முறை பணியாற்றினார்.[1]
Remove ads
ஆரம்ப கால வாழ்க்கை
இவர் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டையில் பிறந்தார். இவர் தனது 10 வயதில் மொரிசியசுக்கு வந்தார்.. இவரது குடும்பத்தினர் வர்த்தகர்கள் ஆவர்.
அரசியல் வாழ்க்கை
இவர் தனது அரசியல் வாழ்க்கை முழுவதும் மொரிசியசு தொழிலாளர் கட்சியின் தீவிர உறுப்பினராக இருந்தார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சியில் பணியாற்றிய இவர், சில தசாப்தங்களாக கட்சியின் பொருளாளர் பதவியை வகித்தார். மொரிசியசின் துணைத் தலைவராக நியமிக்கப்படுவதற்கு முன்பு, இவர், பல ஆண்டுகளாக சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். அரசாங்க தலைமை கொறடாவாகவும், இறுதியில் பிரதமர் சர் சிவசாகர் ராம்கூலம் அரசாங்கத்தில் 1980 முதல் 1982 வரை அமைச்சராகவும் பணியாற்றினார்.
1997 முதல் 2002 வரை முதல் முறையாக துணைகுடியரசு தலைவராக பணியாற்றினார். மேலும் 2002 ஆம் ஆண்டில் காசம் உதீம் பதவி விலகியபோது இவர் சில காலம் பொறுப்பிலிலுருந்தார். இருப்பினும், சர்ச்சைக்குரிய பயங்கரவாத எதிர்ப்பு மசோதாவில் கையெழுத்திட மறுத்து இவர் பதவி விலகினார். இந்த மசோதா முஸ்லிம்களுக்கு பாரபட்சமானது என்று கூறினார். அதன்பிறகு உச்சநீதிமன்ற நீதிபதியான அரி ரங்க பிள்ளைக்கு குடியரசு தலைவர் பதவி வழங்கப்பட்டது.
தற்போதைய மொரிசியசு தொழிலாளர் கட்சியின் தலைவரான நவின்சந்திரா ராம்கூலம் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, இவர் இரண்டாவது முறையாக மொரிசியசின் குடியரசு தலைவர் அனெரூட் ஜக்நாத்த்தால் 2007 இல் மொரிசியசின் துணைக் குடியரசு தலைவரக மீண்டும் நியமிக்கப்பட்டார்.
2010 செப்டம்பர் 15 அன்று துணைக் குடியரசு தலைவராக பணியாற்றியபோது இவர் இறந்தார்.[2] இவர் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டார். இவருக்கு நான்கு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். மற்றொரு மகன் ஏற்கனவே இறந்துவிட்டார்.
Remove ads
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads