அசுரவதம்

From Wikipedia, the free encyclopedia

அசுரவதம்
Remove ads

அசுரவதம் (Asuravadham) 2018 ஆம் ஆண்டில் வெளியான தமிழ் அதிரடி பரபரப்பூட்டும் கிராமியப் பின்னணியிலான திரைப்படம் ஆகும். இத்திரைப்படமானது, மருதுபாண்டியன் என்பவரால் இயக்கப்பட்டதாகும். இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் லீலா லலித்குமார் ஆவார்.[1] இத்திரைப்படத்திற்கு கோவிந்த் மேனன் பின்னணி இசையமைத்துள்ளார். படத்தின் ஒளிப்பதிவானது எஸ். ஆர். கதிர் என்பவரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.[2] இத்திரைப்படமானது, முன்னதாக தமிழ்ப் புத்தாண்டிற்கு முதல் நாளில், ஏப்ரல் 13, 2018 அன்று திரையிடத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், பின்னர் 29 சூன், 2018 அன்று திரையிட முடிவு செய்யப்பட்டு அன்றே வெளியானது. திரைக்கு வந்த இத்திரைப்படம் இரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.[3][4][5][6]

Thumb
விரைவான உண்மைகள் அசுரவதம், இயக்கம் ...
Remove ads

நடிப்பு

  • சரவணனாக சசிக்குமார்
  • மகாவாக நந்திதா சுவேதா
  • சமயனாக வசுமித்ரா
  • கஸ்தூரியாக ஷீலா ராஜ்குமார்
  • அலெக்சாக நமோ நாராயணா
  • முத்துக்காளையாக ஸ்ரீஜித் ரவி

தயாரிப்பு

கொடிவீரன் நவம்பர் 2017 இல் திரைக்கு வந்த பிறகு, தான் அடுத்ததாக, 2015 ஆம் ஆண்டு வெளியான சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது திரைப்படத்தின் மூலமாக அறிமுகமான, இயக்குநர் மருதுபாண்டியனின் அசுரவதம் என்ற படத்தில் நடிக்க இருப்பதாக அறிவித்தார்.[7][8] சசிகுமார் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த நாடோடிகள் திரைப்படத்தின் தொடர்ச்சியாக வெளிவர உள்ள நாடோடிகள் 2 திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது மருதுபாண்டியன் இயக்கத்தில் நடிப்பதற்கு முடிவு செய்துள்ளார்.[9] திண்டுக்கல் மற்றும் கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் இத்திரைப்படமானது படமாக்கப்பட்டுள்ளது.[10] கிடாரி திரைப்படத்தில் அளித்த பங்களப்பிற்காக அறியப்பட்ட கவிஞர் வசுமித்ரா நடிகராக மாறுவதற்கும் இத்திரைப்படம் உதவியுள்ளது எனலாம்.[11]

இத்திரைப்படத்திற்கான காட்சிகள் சசிக்குமார் நாடோடிகள் 2 படத்திற்காக வேலை செய்வதற்கு முன்னதாக 40 நாட்கள் படப்பிடிப்பிற்குப் பிறகு பிப்ரவரி 2018 இல் நிறைவுற்றது. இத்திரைப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகளுக்குப் பிறகு 13 ஏப்ரல் 2018 அன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இத்திரைப்படத்தின் வெளியீடு நடிகர் சங்கத்தால் அறிவிக்கப்பட்ட கோலிவுட் வேலைநிறுத்தத்தின் காரணமாக தாமதமானது.[12][13][14]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads