அசோகர் கல்வெட்டுக்கள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
அசோகர் கல்வெட்டுகள் என்பன பேரரசர் அசோகர் ஆட்சியின் போது வடிக்கப்பட்ட கல்வெட்டுகளைக் குறிக்கும். இவரது கல்வெட்டுகள் இந்திய துணைக்கண்டத்தின் பல்வேறு இடங்களில் கிடைத்துள்ளன.[1] இந்தக் கல்வெட்டுகள் இன்றைய இந்தியா, வங்காளதேசம், நேபாளம், ஆப்கானித்தான், பாக்கித்தான் ஆகிய பகுதிகளில் பரவிய, பௌத்த சமயத்தின் முதல் உறுதியான ஆதாரங்களை வழங்குகின்றன.[2]
அசோகரின் கல்வெட்டுக்கள்
தேவனாம்பியா என அசோகரின் பெயர் பொறித்த கல்வெட்டுக்கள்:
: சிறு பாறைக் கல்வெட்டுக்கள்
: சிறு தூண் கல்வெட்டுகள்
Remove ads
குறிப்பிடத்தக்க கல்வெட்டுகள்
அசோகரது கல்வெட்டுகளை நான்கு வகையாக பிரித்துள்ளனர். அவைகள்:
பதினான்கு பெரும் பாறை வெட்டுகள்
புகழ் பெற்ற பதினான்கு பாறை வெட்டின் ஆறாம் கருத்து மன்னர் மக்களின் பிரச்னைகளை உடனடியாக கவனிப்பதை உணர்த்துகிறது.
"கடவுளுக்குப் பிரியமான மன்னர் பிரியதர்சி இவ்வாறு சொல்கிறார்: 'இதற்கு முன் அரசாங்க வேலைகளைச் சரியாகக் கவனிக்க முடியாமலும், சரியான நேரத்தில் சரியான தகவல்களைப் பெற முடியாத நிலையும் இருந்து வந்தது. அதனால், இந்தப் புதிய ஆணை பிறப்பிக்கப்படுகிறது. மாமன்னராகிய நான் எந்த நேரத்திலும், உணவு சாப்பிட்டுக்கொண்டு இருந்தாலும், அந்தப்புரத்தில் இருந்தாலும், படுக்கையறையில் சயனம்கொண்டு இருந்தாலும், தேரில் பயணம் செய்துகொண்டு இருந்தாலும், பல்லக்கில் இருந்தாலும், கேளிக்கை நிகழ்வுக்காக பூங்காவில் இருந்தாலும், வேறு எந்த இடத்தில் எப்படி இருந்தாலும், அரசாங்க அலுவலர்கள் மூலம் மக்களின் பிரச்னைகள் தொடர்பான தகவல்கள் உடனுக்குடன் எனக்கு அனுப்பப்பட வேண்டும். அதன் மூலம் மட்டுமே மக்களின் பிரச்னைகளை உடனடியாக என்னால் கவனிக்க முடியும். கொடை மற்றும் நலத் திட்டப் பொது அறிவிப்புகள் தொடர்பாக நான் வாய் வார்த்தைகளாகப் பிறப்பித்து இருக்கும் ஆணைகள் அல்லது அமைச்சர்களுக்கு வந்து சேரும் அவசர உத்தரவுகள் தொடர்பாக யாருக்காவது ஏதேனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், அது தொடர்பான தகவல்கள் உடனடியாக மன்னராகிய என்னிடம் வந்து சேரவேண்டும். இது என்னுடைய ஆணை. வேலையைக் கவனமாகச் செய்வதிலும் அதற்காக கடுமையாக உழைப்பதிலும் போதும் என ஒரு நாளும் நான் திருப்தி அடைவது இல்லை. மக்கள் அனைவரது நலத்தையும் பேணுவதை என்னுடைய கடமையாக நினைக்கிறேன். அதைச் சிறப்பாகச் செய்ய நான் கடும் முயற்சியை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது, ஆகவே, வேலைகளைத் தாமதமின்றி உடனே முடிக்க வேண்டும். மக்களின் நலத்தை முன்னெடுப்பதைவிட முக்கியமான வேலை ஏதும் இல்லை. இந்தத் தர்ம ஆணை, வெகு காலத்துக்கு இருப்பதற்காகவும், என் மகன்களும் பேரன்களும் அதற்கடுத்த சந்ததியினரும் இதன்படி நடந்து உலகின் நலத்தைப் பேணுவதற்காகவும், கல்வெட்டில் எழுதப்படுகிறது."
Remove ads
ஜூனாகத் - கிர்நார் கல்வெட்டுகள்

குஜராத் மாநிலத்தில் பிராமி எழுத்திலான மூன்று கல்வெட்டுகள் கிர்நார் மலையிலும் மற்றும் கிர்நார் மலையடிவார நகரமான ஜூனாகத்திலும் காணப்படுகிறது.[3][4]
- அசோகர் கல்வெட்டு, கிர்நார் மலை
- அசோகரின் கிர்நார் மலைக் கல்வெட்டு
- அசோகரின் ஜூனாகத் கல்வெட்டு
- தேசிய அருங்காட்சியகம், புது டில்லி யில் உள்ள அசோகரின் கிர்நார் கல்வெட்டு
தௌலி & ஜௌகுடா கல்வெட்டுக்கள்
ஒடிசா மாநிலத் தலைநகர் புவனேஸ்வரத்திலிற்குத் தெற்கில், 8 கி.மீ. தொலைவில் உள்ள தௌலி மலைப் பகுதியில் பிராமி எழுத்தில் செதுக்கப்பட்ட அசோகரின் கல்வெட்டுகள் கிடைத்துள்ளது.[5][6] இக்கல்வெட்டுகளில் பிக்குகள் மற்றும் பிக்குணிகள் கடைபிடிக்க வேண்டிய துறவற வாழ்க்கை நெறிகள் குறித்தும் மற்றும் அரசு அதிகாரிகளின் நன்னடைத்தைகள் குறித்தும் செதுக்கப்பட்டுள்ளது. மேலும் கஞ்சாம் மாவட்டத்தில் ஜௌகுடா பெரும் பாறைக் கல்வெட்டு உள்ளது.
Remove ads
சன்னதி கல்வெட்டு
இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில், குல்பர்கா மாவட்டத்தில், சித்தபூர் வருவாய் வட்டத்தில், பீமா ஆற்றின் கரையில் அமைந்த சன்னதி கிராமத்தில் அசோரின் பெயர் கொண்ட பிராகிருதம் மற்றும் பிராமி எழுத்துகளில் எழுதப்பட்ட கல்வெட்டுகள் கொண்டது[7][8][9][10] மேலும் அசோகர் மற்றும் அவரது மனைவிமார்களுடன் கூடிய சுண்ணாம்புக் கல் சிற்பம் இங்கு கிடைத்துள்ளது.[9]


Remove ads
மஸ்கி கல்வெட்டு
கர்நாடகா மாநிலத்தின் ராய்ச்சூர் மாவட்டத்தில் அமைந்த மஸ்கி தொல்லியல் களத்தில் கிடைத்த கல்வெட்டுக்களில் அசோகரை சிறப்பித்து கூறப்படும் தேவனாம்பிரியா எனப்பெயர் பொறித்த கல்வெட்டுக்கள் முதன்முதலாக கிடைத்துள்ளது. முன்னர் கிடைத்த அசோகரது கல்வெட்டுக்களில் தேவனாம்பிரியதர்சி எனும் பெயர் பொறித்த கல்வெட்டுககளே அதிகம் கிடைத்துள்ளது
பாக்ராம் கல்வெட்டு

ஆப்கானிஸ்தான் நாட்டின் பார்வான் மாகாணத்தில் [13] உள்ள பாக்ராம் [14] நகரத்தில் கிரேக்கம் மற்றும் அரமேய மொழிகளில் எழுதப்பட்ட கல்வெட்டுக்கள் உள்ளது.
காந்தாரக் கல்வெட்டுக்கள்
ஆப்கானித்தான் நாட்டின் பழைய காந்தாரம் நகரத்தில் பண்டைய கிரேக்கம் மற்றும் இந்தியாவின் பிராகிருத மொழிகளில் எழுதப்பட்ட அசோகரின் இரு மொழி கல்வெட்டு மற்றும் அசோகரின் அரமேய மொழி கல்வெட்டுகள் உள்ளது.
சபாஷ் கார்கி கல்வெட்டு

பாகிஸ்தானின் வடமேற்கில் அமைந்த கைபர் பக்துன்வா மாகாணத்தின், மார்தன் மாவட்டத்தில், சபாஷ் கார்கி ஊரில், அசோகர் கரோஷ்டி எழுத்துமுறையில் நிறுவிய கல்வெட்டு உள்ளது.[15][16]
தட்சசீலம் கல்வெட்டு
பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்திலன் தட்சீலத்தில் உள்ள அசோகரின் தட்சசீலம் கல்வெட்டு மற்றும் ஆப்கானித்தானில் உள்ள காந்தாரக் கல்வெட்டுக்கள் பண்டைய கிரேக்கம் மற்றும் அரமேயம் என இரண்டு மொழிகளில் உள்ளது.
Remove ads
கல்சி பாறைக் கல்வெட்டு
நள சோப்ரா
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
