நாற்பண்புகள்
அறிவு, நிறை, ஓர்ப்பு, கடைப்பிடி - ஆண்களுக்கு ; அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு - பெண்களுக்கு. From Wikipedia, the free encyclopedia
Remove ads
நாற்பண்புகள் அல்லது நாற்குணங்கள் என்பவை ஆண், பெண் இருபாலாருக்கும், அவரவர் இயல்புகளுக்கு ஏற்றவாறு இயற்பண்புகளாய் அமைந்திருக்க வேண்டிய பண்புகளாக மரபுவாதிகளால் வகுத்துக் கூறப்பட்ட பண்புகளாகும்.
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஆண்களுக்குரிய நாற்பண்புகள்
அறிவு
அறிவு என்பது எந்தப் பொருளானாலும் அந்தப்பொருளிடத்திலே அமைந்து அந்த உண்மைத் தன்மையை உணர்வது அறிவு ஆகும்.
நிறை
நிறை என்பது தன்னிடம் காக்க வேண்டியனவற்றைக் காத்துப் போக்க வேண்டியவற்றைப் போக்கி நடக்கும் நடத்தை என்று பொருள்.
ஓர்ப்பு
ஓர்ப்பு என்பது ஒரு பொருளை ஆராய்ந்து உணர்தல் என்பதாகும்.
கடைப்பிடி
கடைப்பிடி என்பது கொண்ட பொருள் மறவாமை என்று விளக்குகிறது. அதாவது “நன்றென அறிந்த பொருளை மறவாமை”; ஆத்திசூடியும் “நன்மை கடைப்பிடி” என்கிறது.
Remove ads
பெண்களுக்குரிய நாற்பண்புகள்
பெண்களுக்குரியதென மரபுவாதிகளால் வகுத்துக் கூறப்பட்ட அகப்பண்புகள் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற நான்கு பண்புகளாகும். முற்போக்குச் சிந்தனைவாதிகள் என சொல்பவர்களும் பெண்ணிலைச் சிந்தனையாளர்களும் நாற்பண்புகள் குறித்த விபரிப்புகளை அடக்குமுறையின் வடிவம் என மறுதலித்து வருகிறார்கள்.
அச்சம்
அச்சம் என்பது வரவிருக்கும் அபாயம் குறித்து ஏற்படும் மன நடுக்கம் எனப் பொருள்படும். பய உணர்வு என்று கருதப்படும்.
மடம்
மடம் என்பது மடமை எனவும் கூறப்படும். அறிந்தவொரு விடயத்தைக் கூட அறியாதவர் போல சபையில் எடுத்துக்கூறாதத் தன்மை என இது விளக்கப்படுகிறது.
நாணம்
நாணம் என்பது வெட்கப்படுவது எனப் பொருள் கொள்ளப்படும்.
பயிர்ப்பு
தாய், தந்தை தவிர்த்து வேற்று நபர் உடல் பரிசம் பட்டதும் ஏற்படும் கூச்ச உணர்வு என இது விளக்கப்படுகிறது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads